கரூர் 41 பேர் உயிரிழந்த சம்பவம்!! டென்ஷனான விஜய் தந்தை SAC..
நடிகர் விஜய், கரூரில் கடந்த மாதம் அரசியல் பரப்புரை செய்தபோது 41 பேர் உயிரிழந்த சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. விஜய்யின் செயலை பலரும் விமர்சித்து வந்த நிலையில், நீதிபதியும் விசாரணையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் மீது கடுமையான விமர்சனத்தை வைத்தார்.
இதனையடுத்து பத்திரிக்கையாளர்கள், பிரபலங்கள் என விஜய்யை கடுமையாக தாக்கி பேசி வருகிறார்கள்.
இந்நிலையில், சமீபத்தில் இறந்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவின் தாயார் அம்சவேணி மறைவுக்கு இயக்குநரும் விஜய்யின் தந்தையுமான எஸ் ஏ சந்திரசேகர் நேரில் சென்று இரங்கல் தெரிவித்துள்ளார்.
இறுதி அஞ்சலி செலுத்திவிட்டு வீடு திரும்பிய எஸ் ஏ சந்திரசேகரிடம், பத்திரிக்கையாளர், கரூர் சம்பவம் குறித்து நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என்று கேட்டுள்ளனர்.
அதற்கு எஸ் ஏ சி, நாங்கள் ஏற்கனவே கஷ்டத்தில் இருக்கிறோம், டெத்துக்கு வந்த இடத்தில் என்ன கேள்வி கேட்கணும்னு தெரியாதா? என்று டென்ஷனாகி சென்றுள்ளார்.