1 லட்சம் கோடி சொத்து!! காதலி பற்றி மனம்திறந்த உலக பணக்காரர் பில் கேட்ஸ்..
பில் கேட்ஸ்
உலக பணக்காரருமான மைக்ரோசாப்ட் இணை நிறுவனருமான பில் கேட்ஸ் தன்னுடைய புதிய காதல் குறித்து பகிர்ந்துள்ளார். திருமணமாகி 27 ஆண்டுகளான நிலையில் மனைவி மெலிண்டாவை விவாகரத்து செய்தார் பில் கேட்ஸ். 1 லட்சம் கோடிக்கு மேல் சொத்து மதிப்பு வைத்திருக்கிறார் பில் கேட்ஸ். சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் தன்னுடைய புதிய காதலி பவுலா ஹார்ட் என்பவரை பற்றி சில விசயம் பகிர்ந்துள்ளார்.
அதில், தனக்கு பவுலா ஹார்ட் கிடைத்தது அதிர்ஷ்டம் என்றும் ஒலிம்பிக்கிற்கு செல்வது மற்றும் பல சிறந்த விஷயங்களை செய்வது என இருவரும் வேடிக்கையாக வாழ்ந்து வருகிறோம் என்று பில் கேட்ஸ் கூறியிருக்கிறார்.
யார் இந்த பவுலா ஹார்ட்
பிரபல மென்பொருள் நிறுவனமான ஆர்க்கிள்(Oracle)தலைமை செயலதிகாரியான மார்க் ஹார்ட்டின் மனைவி தான் பவுலா ஹார்ட். இருவரும் திருமணம் செய்து 30 ஆண்டுகள் வாழ்ந்து வந்த நிலையில் கடந்த 2019ல் மார்க் ஹார்ட் காலமானார். அதன்பின் 2022ல் பில் கேட்ஸுடன் பவுலா ஹார்ட் பழகி, பல இடங்களில் ஜோடியாக உலா வந்தனர்.