மாதவனுடன் முத்தக்காட்சியா? வெங்காய காரணம் கூறிய பிரபல நடிகை..
தமிழ் சினிமாவின் சாக்லேட் பாயாக இருந்து அனைவரையும் ஈர்த்து வந்தவர் மாதவன். அலைபாயுதே படத்தின் மூலம் இயக்குனர் மணிரத்னமால் அறிமுகப்படுத்தப்பட்ட மாதவன் அடுத்தடுத்த தமிழ் படங்களில் நடித்து வந்தார்.
இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர் என பன்முகத்தன்மை கொண்டு விளங்கிய மாதவனை பற்றி நடிகை பிபாசா பாசு பேட்டியொன்றில் பேசியுள்ளார். ஜோடி பிரேக்கர்ஸ் என்ற படத்தில் மாதவனுடன் நடித்திருந்த போது 2012ல் கிரீக் நாட்டிற்கு படப்பிடிப்பில் இருந்துள்ளனர்.
அங்கு மாதவனுடன் முத்தாகாட்சி அமைக்கப்பட இருந்துள்ளது. படப்பிடிப்பு நடிக்கும் இடத்தில் இந்திய உணவு கிடைக்காமல் மாதவன், பிபாசா பாசு உட்பட படக்குழுவினர்கள் சிரப்பட்டுள்ளனர். அப்போது பாஞ்சாப் நண்பர்கள் கூறியபின் உணவு கிடைக்கும் இடத்திற்கு சென்றோம். பட்டர் , சிக்கன் சாலட்ஸ், வெங்காயம் உள்ளிட்ட உணவுகளை சாப்பிட்டுள்ளனர்.
மாதவன் சாப்பாட்டு பிரியர் என்பதால் வெங்காயத்தினை அதிகளவில் சாப்பிட்டுள்ளார். அதனால் அவர் வாயில் இருந்து அந்த நறுமணம் வரும் என்பதால் முத்தக்காட்சியில் நடிக்க தயங்கியுள்ளார்.
பின் கேரவனின் பல மணிநேரமாகியும் வெளியில் வராமல் சுற்றவைத்துள்ளார் பிபாசா பாசு. ஒரு வெங்காயத்தை காரணமாக காட்டி இப்படியா செய்வது என்று படக்குழுவினர் அதிர்ந்தார்களாம்.