கங்குவா-ன்னு வெச்சதுக்கு கத்துவான்னு வெச்சிருக்கலாம்!! கலாய்த்த பிரபல விமர்சகர்கள்..

Suriya Devi Sri Prasad Gossip Today Tamil Movie Review Kanguva
By Edward Nov 15, 2024 08:30 AM GMT
Edward

Edward

in Gossip
Report

கங்குவா

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரம்மாண்டமான முறையில் உருவாகி நவம்பர் 14 நேற்று உலகளவில் ரிலீஸாகியுள்ள படம் கங்குவா.

சூர்யா, பாபி தியோல், திஷா பதானி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியான இப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். படம் ரிலீஸான முதல் காட்சியில் இருந்தே பலரும் மோசமாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.

கங்குவா-ன்னு வெச்சதுக்கு கத்துவான்னு வெச்சிருக்கலாம்!! கலாய்த்த பிரபல விமர்சகர்கள்.. | Bismi Anthanan Review Suriya Kanguva Movie

பிஸ்மி மற்றும் அந்தணன்

அந்தவகையில் பிரபல சினிமா விமர்சகர்கள் பிஸ்மி மற்றும் அந்தணன் கங்குவா படத்தை படுமோசமான விமர்சித்து கலாய்த்துள்ளனர். அதில், கூப்பிட்டீங்களா, கங்குவா படம் பார்த்துட்டு வந்தேன் இரைச்சல் என்று அந்தணன் கூற கங்குவா படம்னு வெச்சதுக்கு பதிலா கத்துவான்னு வெச்சிருக்கலாம் என்று ஆரம்பத்திலேயே கலாய்த்துள்ளனர்.

டயலாக் புரிந்துவிட்டால் கதை என்ன என்று கேட்பீர்கள், கதை புரிந்தால் டயலாக் என்ன என்று கேட்பீர்கள் என்பதற்காக தான் கத்துகிறார்கள் என்றும் கிண்டல் விமர்சித்துள்ளார். முதல் அரை மணிநேரம் கத்துக்கிட்டே இருக்கிறார்கள், எதுக்கு அதை வைத்தார்கள் என்று தெரியவில்லை.

கரிபியன், அப்போகலிப்டா போன்ற படங்களை மிக்ஸ் செய்து வைத்திருக்கிறார்கள் என்று பிஸ்மி கூற மொத்தத்தில் கங்குவா கூப்பிட்டு வெச்சு நொங்குவா என்று அந்தணன் கூறியுள்ளார்.