லேடி சூப்பர் ஸ்டாருன்னு போட சொல்லி டார்ச்சர் செய்தார்!! நயன்தாராவின் சுயரூபத்தை உடைத்த பிஸ்மி..
நயன்தாரா பிரச்சனை
தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை நயன்தாரா பற்றிய விஷயங்கள் தற்போது ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வருகிறது.
தனுஷ் பிரச்சனையை தொடர்ந்து நயன் தாரா, சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் 3 குரங்குகள் என்னை பற்றியே பேசி சம்பாதித்து வருவதாகவும் 50 வீடியோக்களில் 45 வீடியோவில் என்னை பற்றி மோசமாக பேசி வருவதாகவும் கூறி பேட்டியளித்தார்.
அதும் பிரபல பத்திரிக்கையாளர்கள் பிஸ்மி, அந்தணன், சக்திவேல் போன்றவர்களைத்தான் சொல்கிறார் என்று கூறப்பட்டு வந்தது. இதற்கு பிஸ்மி, அந்தணன், சக்திவேல் மூவரும் பதிலடி கொடுத்து வந்தனர்.
டார்ச்சர்
இந்நிலையில் பிஸ்மி அளித்த பேட்டியொன்றில், நாங்கள் சொன்ன தகவல்கள் எல்லாம் நூற்றுக்கு நூறு உண்மை தான். சம்பவம் நடக்கும்போதே நாங்கள் போய் பார்க்காமலேயே, அந்த சம்பவம் நடந்த இடத்தில் இருந்து பார்த்த சிலர் எங்களிடம் சொல்லும் விஷயம் தான்.
அப்படித்தான் O2 என்ற படத்தின் உதவி இயக்குநர் எங்களிடம், நயன் தாரா லேடி சூப்பர் ஸ்டார் என்று போட எங்களை டார்ச்சர் செய்து சாகடித்துவிட்டார் என்று கூறினார்.
இந்த படத்தை ஒரு குறைப்பிரசவமாக மாற்றிவிட்டார்கள். அதில் உண்மை இருக்கிறது என்றுதான் நாங்கள் அந்த செய்தியை கூறினோம். வெளியுலகத்திற்கு தெரியாத பல உண்மைகள் எங்களுக்கு தெரியும்.