நீ சாதிச்சிட்ட மாறா! ப்ளூ சட்டைக்கு வந்த வாழ்க்கையை பாத்தீங்களா?

youtube maaran blueshirt reviewer
By Edward Dec 11, 2021 12:05 AM GMT
Report

சினிமாவை பொருத்தவரையில் படங்களின் மார்க்கெட் ஊடகத்தினரின் விமர்சனத்தை வைத்து தான் மக்கள் மதிப்பிட்டு படத்தினை பார்க்க செல்கிறார்கள். ஆனால் அளுக்கொரு யுடியூப் சேனல் என்று படத்தின் விமர்சனத்தை கண்படி விமர்சித்து வருவது சினிமாத்துறையினருக்கு பெரும் கஷ்டத்தை கொடுப்பதாக தெரிய வந்துள்ளது.

இதை ஒரு சிலர் நேருக்கு நேராக அதிகாரபூர்வமாக கூறி ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்து வருவார்கள். அப்படி இருப்பவர் தான் ப்ளூ சட்டை மாறன். விமர்சனராக அறிமுகமாகி பல படங்களை படுமோசமான திட்டுவதுபோல் பேசி வீடியோவை வெளியிட்டு வருவார்.

தற்போது அவரே ஆன்டி இண்டியன் என்ற படத்தினை இயக்கி வெளியிட்டுள்ளார். தற்போது இப்படத்திற்காக நேற்று கமலா திரை அரங்கத்தில் 3 காட்சி கொடுக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று முதல் 5 காட்சிகள் ஆக்கப்பட்டுள்ளன, காரணம் படத்துக்கு நல்ல ரிப்போர்ட்டு இருப்பதினால் அடுத்தடுத்த காட்சிகளில் மக்களின் வருகை அதிகாமிகியுள்ளது.

இது கமலாவில் மற்றுமில்லை மற்ற திரைஅரங்களிலும் தான் என்று கூறியதோடு நன்றியை தெரிவித்துள்ளார். இதற்கு நெட்டிசன்கள் நீ சாதிச்சிட்ட மாறா என்று கலாய்த்து மீம்ஸ் மற்றும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.