மணிரத்னத்தை வம்பிழுக்கும் ப்ளூ சட்டை மாறன்! பொன்னியின் செல்வன் ரிலீசுக்கு முன்பே சர்ச்சை

Ponniyin Selvan: I Mani Ratnam
1 மாதம் முன்
Parthiban.A

Parthiban.A

மணிரத்னம் இயக்கி வரும் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்தின் ரிலீஸ் தேதி நேற்று அறிவிக்கப்பட்டது.

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் மிக பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இந்த படம் வரும் செப்டம்பர் 30ம் தேதி ரிலீஸ் ஆகிறது என அதிகாரபூர்வமாக ஒரு மோஷன் போஸ்டர் வெளியிட்டு அறிவித்து இருக்கின்றனர்.

"The Cholas are coming" என அந்த போஸ்டரில் குறிப்பிட்டு காவி நிற கொடி பறப்பது காட்டப்பட்டது இருந்தது.

இந்நிலையில் ப்ளூ சட்டை மாறன் ட்விட்டரில் இதை விமர்சித்து இருக்கிறார். "மணி சார்.. தனது படங்களில் மறைமுகமாக வலது சாரி/RSS எண்ணங்களை விதைப்பவர். தற்போது காவி கோடி உடன் வருகிறர். பொன்னியின் செல்வன் போஸ்டர் இதை உறுதி செய்கிறது" என குறிப்பிட்டு இருக்கிறார். 

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.