ஒரு கோடி வாங்கினேன்னு சொன்ன டூபாக்கூர் எங்க!! வாரிசு படத்தால் பொங்கி எழுந்த ப்ளூ சட்டை..
தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் திரையில் வந்த அடுத்த சில மணிநேரத்திலேயே பலர் விமர்சனம் செய்து இணையத்தில் வெளியிட்டுவிடுவார்கள். ஆனால் ஒருசிலரின் விமர்சனம் அந்த படம் நன்றாக இருந்தும் மக்கள் மத்தியில் கெட்ட பெயரை உருவாக்கிடும்.
1 கோடி ரூபாய்
அப்படி ஒரு விமர்சனத்தை கூறி ரசிகர்கள் மத்தியில் பெரிய கண்டனத்திற்குள்ளாகி இருப்பவர் தான் ப்ளூ சட்டை மாறன். சமீபத்தில் வாரிசு படத்தின் பாசிட்டிவ் விமர்சனத்திற்காக விஜய்யிடம் 1 கோடி ரூபாய் வாங்கியதாகவும் செய்திகள் வெளியானது.
அதற்காகத்தான் பிரபலங்களுக்கு என்றே தனி ஷோவை வெளியிட்டனர் படக்குழுவினர். இந்நிலையில் வாரிசு படம் கலவையான விமர்சனத்தை பெற்றுள்ளது என்று ப்ளூ சட்டை மாறன் தனது யூடியூப்பில் கூறியிருந்தார்.

நெகட்டிங் விமர்சனம்
மேலும் இணையத்தில் வாரிசு படத்தினை கிண்டல் செய்து மீம்ஸ் வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார்.
தற்போது, "வாரிசு படத்தை பாராட்ட ஒரு கோடி வாங்குனேன்னு சொன்னானுங்களே... அந்த டுபாக்கூருங்களை யாராச்சும் பாத்தீங்களா?" என்று கூறி ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார்.
இதிலிருந்து தான் வாரிசு படத்திற்காக காசு வாங்கவில்லை என்று கூறியதை நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகிறார்கள்.
வாரிசு படத்தை பாராட்ட ஒரு கோடி வாங்குனேன்னு சொன்னானுங்களே... அந்த டுபாக்கூருங்களை யாராச்சும் பாத்தீங்களா? pic.twitter.com/Q9aEvYxyUj
— Blue Sattai Maran (@tamiltalkies) January 11, 2023