அடாத மழையிலும் அடங்காத வசூல் வேட்டை..வெச்சு செய்யும் ப்ளூ சட்டை மாறன்..
லைக்கா நிறுவனம் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்த லால் சலாம் படத்தினை ரஜினி மகள் ஐஸ்வர்யா இயக்கி இருந்தார். கடந்த பிப்ரவரி மாதம் 9 ஆம்தேதி தியேட்டரில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் அடிவாங்கியது.
இப்படத்தினை ஓடிடி தளத்தில் கூட வாங்காமல் இருந்து வந்தனர். சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியாகி இரு வாரம் கழித்து சக்சஸ் மீட் வைத்து ரஜினி, ஏ ஆர் ரகுமானுடன் புகைப்படத்தையும் எடுத்துக்கொண்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்தை, ப்ளூ சட்டை மாறன் கலாய்த்திருந்தார்.
ராஜாதி ராஜா
இந்நிலையில் சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் படத்தின் வசூல் குறித்து கலாய்த்து எக்ஸ் தளத்தில் பதிவுகளை பகிர்ந்து வருகிறார்.
தற்போது, அடாத மழையிலும் அடங்காத வசூல் வேட்டை, ராஜாதி ராஜா- ராஜகோபால் என்று கிண்டல் செய்து ப்ளூ சட்டை மாறன் ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார்.
அடாத மழையிலும் அடங்காத வசூல் வேட்டை - 'ராஜாதி ராஜா' ராஜகோபால் pic.twitter.com/TYWe6oO8eW
— Blue Sattai Maran (@tamiltalkies) October 16, 2024