உடலை பற்றி படுகேவளமாக வர்ணித்த ரசிகர்! அம்மாவிடம் கேள் என்று பதிலடி கொடுத்த அஜித்பட நடிகை..

ajith abhirami valiami Nerkonda Paarvai
By Jon Apr 08, 2021 08:22 PM GMT
Report

சமுகவலைத்தளத்தில் நடிகைகள் போடும் புகைப்படங்களுக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் அத்துமீறிய கருத்துக்கள் முகழ் சுழிக்க வைத்து வருகிறது. ரசிகர்களின் அந்த கேவளமான செயலை சகிக்காமல் பொறுமையை இழக்கும் நடிகைகள் அதை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள். அந்தவகையில் நடிகர் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் மூலம் நடித்து பிரபலமானவர் நடிகை அபிராமி.

இதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். முன்பிருந்தந்ததை விட தற்போது உடல் எடையை கூட்டியதால் கிண்டலுக்கு ஆளாகி வருகிறார். இந்நிலையில், இதை கவனித்து வந்த ரசிகர்கள் தொடர்ந்து அபிராமி புகைப்படங்கள் வெளியிடும்போது அவரது முன்னழகு எடை கூடிவிட்டதாக கிண்டலடித்து வந்துள்ளனர்.

இதனால் ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த அபிராமி தன்னுடைய முன்னழகை படம் பிடித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு அதனுடன் சில கருத்துக்களையும் தெரிவித்துள்ளார்.

ஆண்களிடமிருந்து பெண்களை வேறுபடுத்தும் விஷயங்களில் ஒன்றான மார்பகம் குறித்து உங்களது தாயாரிடம் கேளுங்கள் எனவும், அவரிடம் பால் குடித்து தானே வளர்ந்திருப்பீர்கள் என தாய்மை உணர்வை பதிவிட்டுள்ளார் அபிராமி. இதுபோல் வெளிப்படையாக பல நடிகைகள் கூறினாலும் இதுபோன்று தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.


Gallery