மிரட்டலான வில்லன் நடிகர் சஞ்சய் தத் இத்தனை கோடி சொத்துக்கு சொந்தக்காரரா? அடேங்கப்பா

Sanjay Dutt Net worth
By Kathick Jul 31, 2025 02:30 AM GMT
Report

பாலிவுட் திரையுலகில் மாபெரும் நட்சத்திரமாக இருப்பவர் சஞ்சய் தத். ராக்கி என்கிற படத்தின் மூலம் இவர் அறிமுகமானார். Munna Bhai MBBS, Lage Raho Munna Bhai, சஜான், நாம், Kaante என பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.

மேலும் சமீபகாலமாக கேஜிஎப் 2, லியோ என தொடர்ந்து வில்லனாக நடித்து கொண்டு இருக்கிறார். மேலும் தற்போது ராஜா சாப், Dhurandhar, அகண்டா 2 என பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.

மிரட்டலான வில்லன் நடிகர் சஞ்சய் தத் இத்தனை கோடி சொத்துக்கு சொந்தக்காரரா? அடேங்கப்பா | Bollywood Actor Sanjay Dutt Net Worth

இந்த நிலையில், அவருடைய சொத்து மதிப்பு குறித்து விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, நடிகர் சஞ்சய் தத்தின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 295 கோடி என கூறப்படுகிறது. மேலும் இவர் ஒரு திரைப்படத்தில் நடிக்க ரூ. 8 கோடி முதல் ரூ. 15 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம்.

மும்பையின் பாந்த்ராவில் உள்ள பாலி ஹில்ஸில் அவருக்கு ஒரு பிரமாண்டமான அடுக்குமாடி குடியிருப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது, அதன் மதிப்பு சுமார் ரூ. 40 கோடி ஆகும். மேலும், துபாயில் அவரது குடும்பத்தினர் வசிக்கும் ஒரு மாளிகையும் உள்ளது.