தன் பெயர் நடிகைக்கு இருந்ததால், பெயரை மாற்றி டாப் நாயகியாக வந்த நடிகை.. யார்?
சினிமா தொடக்கத்தில் பல நடிகைகள் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க போராடுவர்.
அந்த வகையில் சினிமா தொடக்கத்தில் மிகவும் கஷ்டப்பட்டு தற்போது பாலிவுட்டின் ஸ்டார் நாயகியாக வலம் வரும் நடிகை குறித்து உங்களுக்கு தெரியுமா?
கியாரா அத்வானி
ஆம், அவர் வேறுயாருமில்லை, நடிகை கியாரா அத்வானி தான்.
ஆனால், அவருடைய உண்மையான பெயர் அது இல்லை என்று உங்களுக்கு தெரியுமா? ஆம், கியாரா அத்வானியின் உண்மையான பெயர் ஆலியா அத்வானி.
அவர் பாலிவுட்டுக்கு வந்தபோது, ஆலியா பட் பிரபலமாக இருந்ததால், பெயரை மாற்ற முடிவு செய்தார். அவர் கியாரா பெயரை வைத்தது ஏன் என ஒரு பேட்டியில் பகிர்ந்தார்.
அதில், ' அஞ்சானா அஞ்சானி படத்தில் பிரியங்கா சோப்ராவின் கியாரா கதாபாத்திரம் என்னை ஈர்த்தது. முதலில் அந்த பெயரை என் மகளுக்கு வைக்க நினைத்தேன்.
எனக்கு அப்போது ஸ்க்ரீன் பெயர் தேவைப்பட்டதால், அந்தப் பெயரை நான் வைத்துக்கொண்டேன்" என்று தெரிவித்தார்.