51 வயதில் உடலை ஃபிட்டாக வைத்திருக்கும் நடிகை மலைக்கா அரோரா!! தீவிர ஒர்க்கவுட் வீடியோ..
மலைக்கா அரோரா
90ஸ் காலக்கட்டத்தில் பாலிவுட் சினிமாவில் டாப் நடிகையாகவும் கவர்ச்சி கன்னியாகவும் திகழ்ந்து வந்தவர் நடிகை மலைக்கா அரோரா. மாடல் துறையில் இருந்து சினிமாவில் நடிக்க ஆரம்பித்த மலைக்கா கடந்த 1998ல் நடிகரும் இயக்குநருமான அர்பாஸ் கான் என்பவரை திருமணம் செய்திருந்தார்.
திருமணத்திற்கு பின்பும் நடிப்பில் கவனம் செலுத்திய மலைக்கா, 2002ல் அர்ஹான் கான் என்ற மகனை பெற்றெடுத்தார். அதன்பின் 2016ல் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து 2017ல் விவாகரத்து பெற்றனர்.
இதனை அடுத்து நடிகை மலைக்கா அரோரா, பாலிவுட் நடிகர் அர்ஜுன் கபூருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்தவர் திடீரென பிரிந்துவிட்டார் என்று கூறப்பட்டது.
தீவிர ஒர்க்கவுட்
அதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் 51 வயதிலும் உடலை ஃபிட்டாக வைத்திருக்கிறார் மலைக்கா. அதற்காக தீவிர ஜிம் ஒர்க்கவுட் செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்துள்ளார்.
சமீபத்தில் கடுமையான உடற்பயிற்சி செய்துள்ள வீடியோவை பகிர்ந்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்திருக்கிறார்.