விழா மேடையில் தர்மசங்கடம்!! பொறாமையில் வாரிசு நடிகையை அவமானப்படுத்திய இந்தி நடிகை...
கன்னட சினிமாவில் அறிமுகமாகி தெலுங்கு சினிமாவில் புகழ் பெற்று தற்போது பாலிவுட் வரை சென்று நேஷ்னல் கிரஷாக கொடிக்கட்டி பறந்து வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா.
சமீபத்தில் விஜய் நடிப்பில் வாரிசு படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தார்.
இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியை அம்பானி வீட்டில் இந்திய சினிமா மற்றும் அரசியல், விளையாட்டு பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
பிரம்மாண்டமாக நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ராஷ்மிகா மந்தனாவும் கலந்து கொண்டார்.
அப்போது போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் போது பாலிவுட் நடிகை ஸ்ரத்தா கபூர், ராஷ்மிகா மந்தனாவை பார்த்தும் பார்க்காதது போல் சென்று அவமானப்படுத்தி இருக்கிறார்.
இதற்கு ராஷ்மிகா சிரிப்புடன் தன்னுடைய ரியாக்ஷனை கொடுத்தார். பாலிவுட் நடிகைகளுக்கு தென்னிந்திய சினிமாவில் இருந்து வரும் நடிகைகளை பிடிக்காததால் தான் இப்படி ஸ்ரத்தா கபூர் நடந்து கொண்டிருக்கிறார் என்று விமர்சித்து வருகிறார்கள்.
Has Shraddha Kapoor intentionally ignored Rashmika Mandanna? ?? pic.twitter.com/LppYTRYNb3
— ????❤️? (@QHDposts) September 19, 2023