தன் கணவரின் மரணத்தில் நடனமாடிய பிரியங்கா ரோபோ ஷங்கர்.. பெரும் சர்ச்சை! பதிலடி கொடுத்த பிரபல நடிகர் போஸ்
நடிகர் ரோபோ ஷங்கரின் மறைவு மிகப்பெரிய துயரத்தை அனைவருக்கும் தந்தது. திரையுலகினரில் இருந்து அரசியல்வாதிகள் வரை பலரும் அவரின் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.
ரோபோ ஷங்கரின் இறுதி ஊர்வலத்தில் அவரது மனைவி பிரியங்கா ஷங்கர் நடனமாடினார். தனது துக்கத்தையும், துயரத்தையும் வெளிப்படுத்தும் வகையில் சோகத்தில் நடனமாடிய அவரை, பலரும் தவறாக கிண்டல் செய்து பேசினர். இது பெரும் சர்ச்சையானது.
இந்த நிலையில், விஜய் டிவியில் ரோபோ ஷங்கரின் நினைவாக நடந்த நிகழ்ச்சியில், அவரின் நெருங்கிய நண்பரான நடிகர் போஸ் வெங்கட் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து, பதிலடி கொடுத்து பேசியுள்ளார்.
அவர் கூறியதாவது: "இப்போ கூட சமீபத்தில் ஒரு விமர்சனம் வந்தது, அவங்க நடனமாடினார் என்று. நாங்க நடனமாடாத நாளே இல்லை. நான் நடனமாட மாட்டேன். ஆனால், ரோபோ என் பக்கத்தில் வந்து, ஆடு ஆடு என கூறி எப்படியாவது என்னை ஆட வைத்துவிடுவான். இந்திரஜா ஒரு ஸ்டேப் போடுவா நான் ஒரு ஸ்டேப் போடுவேன், பிரியா ஒரு ஸ்டேப் போடுவா, அது எங்களுக்கு சாப்பிடு மாதிரி.
என் வாழ்வியலோடு கலந்தது அந்த ஆட்டம். அந்த ஆட்டத்தின் அர்த்தம் வேறு யாருக்கும் புரியாது. நெருக்கமாக இருக்கிறார் எங்களுக்குத்தான் புரியும். அது ஒரு உணர்வு. அது நாங்க பேசிக்கிறோம். ஆட்டத்தின் மூலமாக பேசிக்கிறோம். யாரும் அதை கிண்டல் செய்யாதீர்கள். அது ஒரு மொழி. அது அவங்க மொழியில் பேசிக்கிறாங்க"