குக் வித் கோமாளியில் என்னதான் நடக்கிறது? KPY சரத் வெளியிட்ட பதிவு
குக் வித் கோமாளி 6 நிறைவு பெற்றுள்ளது. இதில் நடிகர் ராஜு டைட்டில் வின்னர் ஆகியுள்ளார். இரண்டாவது இடத்தை நடிகை ஷபானா பிடித்துள்ளார். வெற்றியாளராக ராஜுவுக்கு ரூ. 5 லட்சமும், இரண்டாம் இடத்தை பிடித்த ஷபானாவுக்கு ரூ. 2 லட்சமும் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொடர்ந்து பல சீசன்களில் கோமாளியாக கலக்கிக்கொண்டு இருப்பவர் சரத். இவர் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி, மக்கள் மனதில் இடம்பிடித்தார். இதன்பின், CWC நிகழ்ச்சி இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.
இந்த நிலையில், சரத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த பதிவில், எனக்கு இந்த விருது போதும் என குறிப்பிட்டு முந்தைய சீசனில் வாங்கிய விருதை பதிவு செய்துள்ளார். மேலும் அப்புறம் எனக்கு மக்களோட அன்பு, அந்த அவார்டு போதும். இனிமேல் மதியாதார் வாசலை மிதியாதே என பதிவிட்டுள்ளார்.
குக் வித் கோமாளியில் பலருக்கும் விருதுகள் வழங்கப்பட்ட நிலையில், சரத்தின் கடின உழைப்பை மதித்து சரியாக அங்கீகரிக்கப்படவில்லை என்பது இவருடைய பதிவின் மூலம் நமக்கு தெரிகிறது. சரத்தின் இந்த பதிவுக்கு ரசிகர்கள் பலரும், இன்ஸ்டா பக்கத்தில் தங்களது ஆதரவை தெரிவித்து வருகிறார்கள்.