நெருக்கமான காட்சியில் நடிக்க சூர்யா, ஆனால் ஜோதிகா அப்படி இல்லை.. நடன இயக்குநர் வெளிப்படை!!
தென்னிந்திய சினிமாவில் நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்துகொண்டு இருக்கின்றனர் சூர்யா- ஜோதிகா. தற்போது இருவருமே சினிமாவில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பேட்டி கலந்துகொண்ட நடன இயக்குநர் பிருந்தா, ஜோதிகா சூர்யா காதல் கதை பற்றி பேசியிருக்கிறார்.
அதில், காக்க காக்க படத்தின் போது இருவரும் காதலித்துக் கொண்டுதான் இருந்தார்கள். ஆனால் வெளியே அதை காட்டிக் கொள்ளாமல் இருந்தனர்.நான் என்னுடைய உதவியாளர்களை அனுப்பி அவர்களுக்கு இடையே காதல் இருக்கிறதா இல்லையா என்பதை கண்டுபிடிக்க, பார்த்தோம்.ஆனால் எங்களால் அதை கண்டுபிடிக்க முடியவில்லை.
காக்க காக்க படத்தில் இடம்பெற்றுள்ள ஒன்றா இரண்டா பாடல் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. அதில், அது ஒரு குட்டி அறையில் எடுத்த படம். ஆனால் சூர்யா நடிக்க வெட்கப்படுவார்.
ஆனால் ஜோதிகா அப்படி கிடையாது, ஏய் கிட்டே வா என்று ஓப்பனாக பேசுவார். என்னிடம் சூர்யா, நெருக்கமான காட்சி எல்லாம் வேண்டாம் என கெஞ்சுவார். அதன் பின் அவருக்கு சூழ் நிலையை எடுத்துக்கூறி அதில் நடிக்க வைத்தோம் என்று பிருந்தா தெரிவித்துள்ளார்.