உன் நிஜ முகத்தை காட்டு.. பப்ளிக்கில் நடிகை நயன் தாராவை அவமானப்படுத்தி பேசிய பிருந்தா மாஸ்டர்..

Vijay Nayanthara Brinda
By Edward Oct 30, 2022 07:18 PM GMT
Report

தென்னிந்திய லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும் நடிகை நயன் தாரா, பல ஆண்டுகள் கழித்து சில ஆண்டுகளுக்கு முன் பிகில் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார்.

வில்லு

அதற்கு முன் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருபரும் இணையாமல் இருந்தனர். பிகில் படத்திற்கு முன் வில்லு படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். அப்படத்தின் போது பிரமோஷனுக்காக பிரபுதேவா, விஜய், நயன் தாரா நேரலை நிகழ்ச்சியில் பலரின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் படியான சம்பவம் நடந்தது. அப்போது பிருந்தா மாஸ்டர் மற்றும் கலா மாஸ்டர் இருவரும் விஜய், மற்றும் நயன் தாராவை பற்றி புகழ்ந்து பேசி வந்தனர்.

பிருந்தா மாஸ்டர்

அப்போது நயன் தாராவிடம், ஏன் இவ்வளவு அமைதியாக இருக்கிறாய் என்று கேட்டுள்ளார். அதற்கு நயன், அதிர்ச்சியோடு சிரித்தபடி, நான் எப்பவும் இப்படித்தானே உங்களுக்கு தெரியாதா என்று பதிலளித்துள்ளார். உடனே பிருந்தா, ரொம்ப நல்ல பொண்ணு மாதிரி நடிக்காதா, உன்னுடைய நிஜ முகத்தை காட்டு என்று கலாய்க்க, என் மானத்தை வாங்காதீங்க என்று கூறியுள்ளார். மானமா அப்படினா என்ன நயன் தாரா என்று பிருந்தா மாஸ்டர் அப்படியே அவமானப்படுத்தும் விதமாக பேசியுள்ளார்.

இவங்க போனை தயவு செய்து கட் பண்ணுங்க என்று தொகுப்பாளியிடம் கூறியுள்ளார். நீ எப்பவும் நல்ல பொண்ணு தான் என்று மறைமுகமாகி சாடியபடி புகழ்ந்து பேசி கட் செய்துள்ளார். இந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.