அது நான் அவன் இல்லை! சசிகலா தான் என கூறி கதையை மாற்றிய செல்லூர் ராஜு..
politics
sellurraju
naanavanillai
By Edward
அரசியலில் ஒருசிலர் காலத்திற்கு ஏற்ப மாறி மாறி பேசுவார்கள். அரசியல் வாதியை நம்பாதீர்கள் என்று பலர் கூறி வரும் நிலையில் சமீபத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசிய ஒரு ஆடியோ வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
அதில் சசிகலா அவர்களின் வருகைக்கு ஆதரவாக செல்லூர் ராஜு ஒரு தொண்டரிடம் பேசியது தான். அது பற்றி விளக்கம் அளித்து பேட்டி கொடுத்துள்ளார் செல்லூர் ராஜு. அதில் பேசியது நானில்லை என்னை மாதிரி வேறு யாரோ பேசி இருக்கிறார்கள்.
அதிமுக மேலிடமான ஒருக்கிணைப்பாளர்களை தாண்டி எந்தவொரு முடிவும் எடுக்க போவதில்லை என்றும் எங்கள் வளர்ச்சி மேல் பிடிக்காத சமுக விரோதிகளால் தான் இதை செய்திருப்பார்கள் என் தெரிவித்துள்ளார். இதற்கு கதையை மாற்றி பேட்டியளித்திருக்கிறார் என்று நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.