பிரச்சனைக்கு மேல் பிரச்சனையை ஆரம்பிக்கும் பாலா! பொறுமையை இழக்கும் நடிகர் சூர்யா..

Suriya Bala
3 நாட்கள் முன்
Edward

Edward

சூரரைப்போற்று, ஜெய் பீம், எதற்கும் துணிந்தவன் போன்ற படங்களுக்கு பிறகு சூர்யா வாடிவாசல் படத்தின் டெஸ்ட் சூட்டினை முடித்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகினார். அப்படி இயக்குனர் பாலாவுடன் பல ஆண்டுகள் கழித்து சில மாதங்களுக்கு முன் #சூர்யா41 படத்தின் பூஜை ஆரம்பிக்கப்பட்டது.

படப்பிடிப்பு கன்னியாக்குமரியில் ஆரம்பித்து நல்லபடியா சென்ற நிலையில் ஒரு காட்சியில் காலை முதல் மதியம் வரை சூர்யாவை ஓடவிட்டு வந்துள்ளாராம். இதனால் கடுப்பாகிய சூர்யா காரை எடுத்துக்கொண்டு சென்னைக்கே திரும்பியுள்ளார். சூர்யா வராததை தெரிந்த பாலா சூட்டிங்கினை முடித்து பேக் செய்துள்ளார்.

இந்த விஷயம் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் முதற்கட்ட படப்பிடிப்பு தான் முடிந்துள்ளது வேற எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறப்பட்டது. இந்நிலையில் படத்தின் இரண்டாம் கட்டப்படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் ஆரம்பிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியது.

கோவாவில் நடைபெறவுள்ள இப்படத்தின் இரண்டாம் கட்டப்படபிடிப்பில் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் படத்திற்கு தேவைபடுகிறார்களாம். அதனால் இயக்குனர் பாலா வெளிநாட்டில் இருந்து சிலரை வழவழைத்து தனித்தனி அறையை புக் செய்து சாப்பாடு வரை பார்க்க சொல்லியிருக்கிறார்.

ஏற்கனவே பாலா படங்கள் என்றால் பட்ஜெட் கம்மியாகத்தான் இருக்கும். அப்படியிருக்கையில் ஏன் இந்த செலவை வைத்தார். சுற்றுலாவுக்கு வரும் வெளிநாட்டவரை வைத்தே எடுக்கலாமே ஏன் தனியாக வரவழைத்துள்ளார் என்று சூர்யா சங்கடத்தில் இருந்துள்ளாராம்.

பாலா பெரும்பாலும் பெர்ஃபெக்னலாக யோசிப்பார். அப்படி இன்னும் என்னெல்லாம் பண்ணப்போகிறாரோ பாலா என்று படக்குழுவினர் புலம்பியும் வருகிறார்களாம்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.