நாத்தம் அடிக்கிற குப்பைங்க..இவ்ளோ அசிங்கம்!! கொந்தளித்த சீரியல் நடிகை லட்சுமி..
பிக்பாஸ் சீசன் 9
விஜய் தொலைக்காட்சியில் மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட ரியாலிட்டி ஷாக்களில் ஒன்றாக இருப்பது பிக்பாஸ். தற்போது விஜய் சேதுபதி தொகுத்து வழங்கப்பட்டு வரும் பிக்பாஸ் சீசன் 9 சிறப்பாக நடைபெற்று வருகிறது.
அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் முதல் வாரம் முடியும் முன்பே, நந்தினி என்னால் பிக்பாஸ் வீட்டில் இருக்க முடியாது என்று கூறி வெளியேறினார்.

அவரை தொடர்ந்து முதல் வார எவிக்ஷனில் குறைந்த வாக்கு பெற்று பிரவீன் காந்தி எவிக்ட்டாகினார். கடந்த வாரம் 2வது எவிக்ஷனில் அப்சரா சிஜே எவிக்ட் செய்யப்பட்டு பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறினார்.
நடிகை லட்சுமி
இந்நிலையில் பிக்பாஸில் போட்டியாளர்கள் பேசும் ஆபாச பேச்சுக்கள் நடந்து கொள்ளும் விதங்களை பற்றி பலரும் விமர்சித்து வருகிறார்கள். அந்தவகையில் சீரியல் நடிகை லட்சுமி ஒரு வீடியோவை பகிர்ந்து பிக்பாஸ் போட்டியாளர்களை கடுமையாக தாக்கி பேசியிருக்கிறார்.

அதில், சீப் பாஸ் சீசன் 9 பத்திதான் பேசப்போக்கிறேன். கேவலத்தோட உச்சக்கட்டத்துல போய்ட்டு இருக்கு. உங்க வீட்டு குழந்தைங்க இத பாக்குறாங்களா? இல்லையா?. கொஞ்சமாவது உங்களுக்கு சமூக அக்கறை இருக்கா, இல்லையா? இந்த கண்றாவிய ஒளிப்பரப்பி, நீங்க என்ன சாதிக்க போறீங்க. அதுல வர காச வெச்சு எப்படி சாப்பிடுறீங்க.
நீங்க உள்ள வெச்சு இருக்க போட்டியாளர்கள் எல்லோரும் நாத்தமடிக்கிற குப்பைங்க. அவங்கள வெளியே போடுங்க, அந்த இடத்த சுத்தம் பண்ணிவிடுங்க. மாதர் சங்கம் ஏதாவது பாட்டுல தப்பான வரி இருந்தா கொடி புடிச்சிட்டு வந்துடுவாங்க, இவ்ளோ அசிங்கம் நடக்குது எங்க போனீங்க. அசிங்கமா பேசுறவங்கள கண்ட்ரோல் பண்ணுங்க, விஜய் சேதுபதி சார் என்று சீரியல் நடிகை லட்சுமி தெரிவித்துள்ளார்.