37வது ப்ரீ பர்த்டே பார்ட்டி!! வாணி போஜனுக்கு யார் கூட இருக்காங்க பாருங்க..
வாணி போஜன்
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை சென்று கலக்கி வருபவர்களில் வாணி போஜனும் ஒருவர். இவர் சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வ மகள் என்ற சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.
சின்னத்திரை சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமான இவர் அசோக் செல்வன் நடிப்பில் வெளியான "ஓ மை கடவுளே" என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். அதன் பின், படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

சிறந்த நடிப்பு மூலம் தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் பிடித்து அதிக ரசிகர்களையும் சம்பாதித்து உள்ளார். வரும் அக்டோபர் 28 ஆம் தேதி அன்று தன்னுடைய 37வது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார் வாணி போஜன்.
37வது ப்ரீ பர்த்டே
தற்போது வாணி போஜனின் நெருங்கிய தோழிகளான, நடிகை சம்யுக்தா ஷான், பிரக்யா நாகர், மீனாட்சி கோவிந்தராஜன், ஐஸ்வர்யா தத்தா, நடிகை அதுல்யா ரவி உள்ளிட்டோர், வாணி போஜனுக்கு கேக் வெட்டி ப்ரீ பர்த்டே பார்ட்டி கொண்டாடியிருக்கிறார்கள்.
அதன் புகைப்படத்தை நடிகைகள் தங்கள் இன்ஸ்டாகிராம் ஸ்ரோரியில் பகிர்ந்துள்ளனர்.
#VaniBhojan pic.twitter.com/CyT46A3VJi
— Sillarai Siruvar (@SillaraiSiruvar) October 25, 2025
