ஒரே நேரத்தில் 4 பேருடன் டேட்டிங்!! சரக்கு அடிப்பேன்!! உண்மையை கூறிய 39 வயது நடிகை..
முமைத் கான்
2004ம் ஆண்டு பாலிவுட் படத்தில் டான்சராக அறிமுகமானவர் நடிகை முமைத் கான். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஏகப்பட்ட படங்களில் குத்தாட்டம் போட்டுள்ளார். இவர் தமிழில் கமல்ஹாசனின் வேட்டையாடு விளையாடு படத்தில் இடம்பெற்ற நெருப்பே சிக்கி முக்கி நெருப்பே பாடலுக்கு படு மாஸ் நடனம் ஆட ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்டார்.

அதன் பின், தளபதி விஜய்யுடன் "என் செல்லப் பேரு ஆப்பிள்" பாடலுக்கும் குத்தாட்டம் போட்டார். சியான் விக்ரம், ஸ்ரேயா நடித்த கந்தசாமி படத்தில் இடம்பெற்ற "என் பேரு மீனாகுமாரி" பாடலும் இவருக்கு ஏகப்பட்ட ஹைப்பை உருவாக்கியது.
39 வயதாகும் முமைத் கான் திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக வசித்து வருகிறார். தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, ஹைதராபாத்தில் நடந்த ரேவ் பார்ட்டி தொடர்பாக போதைப்பொருள் விவகாரத்தில் முமைத் கான் பெயர் அடிப்பட்டது.
போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரின் விசாரணையில், நான் மது அருந்துவேன், சிகரெட் பிடிப்பேன், ஆனால் போதைப்பொருள் பயன்படுத்தமாட்டேன் என்று கூறி ரத்த, முடி மாதிரிகளையும் அளித்தார்.

4 பேருடன் டேட்டிங்
சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், கடந்த காலத்தில் நான் ஒரே நேரத்தில் 4 பேருடன் டேட்டிங் சென்றிருக்கிறேன். எனக்கு அண்மையில் ஒரு பெரிய விபத்து ஏற்பட்டு, அதிலிருந்து குணமடைந்துவிட்டேன்.
அதன்பின் டேட்டிங் சென்றவர்களுடன் எந்தவிதமான தொடர்பு இல்லை. அவர்களை விட்டு பிரிந்துவிட்டேன். இப்போது நான், தன்னந்தனியாக வாழ்ந்து வருகிறேன். எதிர்காலத்தில் திருமணம் செய்து கொள்வது பற்றி எந்தவிதமான என்ணமும் இல்லை.