திருமணமாகி 4 மாதத்தில் இரட்டை குழந்தையுடன் தீபாவளி.. தல தீபாவளி கொண்டாடும் 2022 காதல் தம்பதியினர்
வெள்ளித்திரையானாலும் சரி சின்னத்திரையானலும் சரி, இந்த வருடம் எக்கச்சக்கமான நட்சத்திரங்கள் திருமணத்தை முடித்திருக்கிறார்கள். சிலர் திடீர் திருமணமும் சிலர் பிளான் செய்து பிரம்மாண்ட முறையிலும் திருமணம் செய்தும் வந்துள்ளனர். அந்தவகையில் இந்தியளவில் சினிமா நட்சத்திரங்கள் வரும் தீபாவளியை தல தீபாவளியாக கொண்டாடுபவர்களின் லிஸ்ட்டை பார்ப்போம்.
ஆர்யன் - ஷபானா
சின்னத்திரை சீரியல் நடிகையான ஷபானா நடிகர் ஆர்யனை கடந்த ஆண்டு நவம்பர் 12 ஆம் தேதி காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணமாகி சில கருத்து வேறுபாடுகள் இருந்ததாகவும் சில செய்திகள் வெளியானது. ஆனால் அது உண்மையில்லை என்று புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்தனர்.
மதன் - ரேஷ்மா
நடிகை ஷபானாவின் தோழியான நடிகை ரேஷ்மா அவர்களுக்கு அடுத்த் சில நாட்களில் அதாவது நவம்பர் 15 ஆம் தேதி திருமணம் செய்து தல தீபாவளியை கொண்டாடவுள்ளனர்.
சித்து - ஸ்ரேயா
ராஜா ராணி 2 சீரியல் நடிகர் சித்து சீரியல் நடிகை ஸ்ரேயாவை காதலித்து கடந்த நவம்பர் 22 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்.
ஆலியா - ரன்பீர்
கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேல் பாலிவுட் காதல் ஜோடிகளாக லிவ்விங் டு கெதர் வாழ்க்கையை வாழ்ந்து வந்தவர்கள் நடிகை ஆலியா பட், ரன்பீர் கபூர். தங்களின் குடும்பத்தினரின் சம்மதத்துடன் பிரம்மாண்ட முறையில் மும்பையில் திருமணம் செய்து கொண்டனர்.
நயன்தாரா - விக்னேஷ் சிவன்
லேடி சூப்பர் ஸ்டார் நயன் தாரா 7 வருடங்களாக காதலித்து வந்த இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த ஜூன் மாதம் 9 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். திருமணமாகி 4 மாதத்தில் இரட்டை குழந்தையுடன் தல தீபாவளியை கொண்டாடவுள்ளனர்.
ஆதி -நிக்கி கல்ராணி
நடிகர் ஆதி பல ஆண்டுகளாக காதலித்து வந்த நடிகை நிக்கி கல்ராணியை கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டு தல தீபாவளி கொண்டாடவுள்ளார்.
ரவீந்தர் - மகாலட்சுமி
சின்னத்திரை சீரியல் நடிகை மகாலட்சுமி தயாரிப்பாளர் ரவீந்தரை செப்டம்பர் 1 ஆம் தேதி திடீர் திருமணம் செய்து ஷாக் கொடுத்தார். 2 வருடங்களாக ரகசிய காதலில் இருந்து பின் இருவரும் திருமணம் செய்து தலதீபாவளியை கொண்டாடவுள்ளனர்.