திருமணத்திற்கு காசு வாங்கும் சினிமா பிரபலங்கள்.. அதிர்ச்சியை கிளப்பிய நடிகர்

Marriage Anant Ambani Nagarjuna
By Karthick Raja Jul 24, 2024 03:57 AM GMT
Report

தெலுங்கு திரையுலகில் சூப்பர்ஸ்டார் நடிகர்களில் ஒருவரான நாகார்ஜுன் கூறிய விஷயம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருமணங்களில் கலந்துகொள்ள சினிமா நட்சத்திரங்கள் காசு வாங்குகிறார்கள் என அவர் கூறியுள்ளார். சமீபத்தில் ஆனந்த் அம்பானியின் திருமணம் மிகப்பிரமாண்டமாக நடந்து முடிந்தது.

திருமணத்திற்கு காசு வாங்கும் சினிமா பிரபலங்கள்.. அதிர்ச்சியை கிளப்பிய நடிகர் | Celebrities Getting Paid For Attending Marriage

இந்த திருமணத்திற்காக ரூ. 5000 கோடி செலவு செய்துள்ளார்களாம். ஆனந்த் அம்பானி திருமணத்தில் கலந்துகொண்ட பிரபலங்களுக்கு ரூ. 2 கோடி மதிப்புள்ள கைக்கெடிகாரங்கள் வழங்கப்பட்டது.

மேலும், திருமணத்தில் பங்கேற்ற பிரபலங்கள் காசு வாங்கி கொண்டு தான் வந்தார்கள் என ஒரு பக்கம் பேசப்பட்டது.

ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. இந்த சூழலில் தற்போது நாகார்ஜூனா பேசிய விஷயம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.