சினேகா, மீனா முதல் விஜய் - சங்கீதா விவாகரத்து வரை!! எல்லாத்துக்கும் இந்த ஒரு காரணம் தான்..
தமிழ் சினிமாவில் இருக்கும் நட்சத்திரங்களை பற்றி எதாவது ஒரு செய்தி வந்தால் போதும் அதை பெரிதாக பேசப்பட்டு இல்லாத ஒன்றை பரப்பி வைரலாக்கி விடுவார்கள். அப்படி சமீபத்தில் முன்னணி நடிகர் நடிகைகளின் திருமண மற்றும் காதல் வாழ்க்கை பற்றி பல வதந்தி செய்திகள் வெளியாகியது. ஒருசில அதிகாரப்பூர்வ அறிவிப்பு விடுத்தாலும் அதற்கான காரணங்களை கூட கட்டுக்கதைகளாக மாற்றிவிடுகிறார்கள்.

மீனா - நயன் தாரா
அப்படி நடிகை மீனாவின் கணவர் இறந்தப்பின் ஒருசில மாதங்களில் இரண்டாம் திருமணம் செய்து கொள்ளவுள்ளார் என்று செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கு மீனா தரப்பில் இருந்து அமைதியாக இருந்தாலும் தன்னுடைய புகைப்படங்கள் மூலம் அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
நடிகை நயன் தாரா 7 வருடங்கள் கழித்து தான் காதலித்து வந்த இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி 4 மாதத்தில் இருவருக்கும் கருத்து வேறுபாடு என்றும் பிரியவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியது. அதற்கு நயன் - விக்கி இருவரும் தங்கள் குழந்தைகளுடன் ரொமான்ஸ்-ஆக பார்த்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு முற்றுப்புள்ளி வைத்தார்.

சினேகா - மகாலட்சுமி
தமிழ் சினிமாவில் சிறந்த ஜோடிகளாக 10 ஆண்டுகள் தங்கள் திருமண வாழ்க்கையை தொடர்ந்து வரும் நடிகை சினேகா - பிரசன்னா இருவரும் விவாகரத்து செய்யவுள்ளதாக செய்திகள் பரவியது. ஆனால் அதுபொய் என்று பிரசன்னா விளக்கம் அளித்தும் சினேகா கணவருடன் இணைந்து நெருக்கமான புகைப்படத்தை பகிர்ந்து வந்தார்.
சின்னத்திரை சீரியல் நடிகை மகாலட்சுமி, தயாரிப்பாளர் ரவீந்தரை திருமணம் செய்த சில மாதத்தில் கர்ப்பமாக இருக்கிறார் என்றும் பிரியவுள்ளார் என்ற செய்தியும் வெளியாகி அவர்களும் அதற்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.

டிடி - நாக சைதன்யா
பிரபல தொகுப்பாளினியாக இருக்கும் டிடி என்கிற திவ்யதர்ஷினி, முதல் விவாகரத்து பெற்று பல ஆண்டுகளுக்கு பிறகு இரண்டாம் திருமணம் செய்யவுள்ளார் என்ற வதந்தியும் பரவியது.
நடிகை சமந்தாவை விவாகரத்து செய்து பிரிந்த நடிகர் நாக சைதன்யா பொன்னியின் செல்வன் பட நடிகை சோபிதாவை காதலித்து திருமணம் செய்யவுள்ளார் என்ற வதந்தியும் பரவியது.

விஜய் - சங்கீதா
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் விஜய் - 22 ஆண்டு திருமண வாழ்க்கையில் சங்கீதாவை விவாகரத்து செய்துவிட்டு கீர்த்தி சுரேஷை திருமணம் செய்யவுள்ளார் என்ற மோசமான வதந்தி செய்தி பரவியது. இதற்கு நடிகர் விஜய், வாரிசு படத்தினை மனைவி சங்கீதாவுடன் சென்று பார்த்து விவாகரத்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார். ஆனால் அவர்கள் விவாகரத்து பெற்றது உண்மையா, படம் பார்க்க சென்றார்களா என்று அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை. இருவரும் இணைந்து நிகழ்ச்சிகளுக்கோ அல்லது புகைப்படம் வெளியிட்டு வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று ரசிகர்களின் கருத்தாக உள்ளது.