வாழ்க்கையை நாசமாக்கிய காதல்..கசப்பான 2 திருமணம்!! நடிகை சார்மிளாவின் வாழ்க்கை வீழக்காரணம்..

Gossip Today Relationship Tamil Actress Actress
By Jai Sep 03, 2026 09:15 AM GMT
Report

சார்மிளாவின் வாழ்க்கை

நடிகை சார்மிளா 90களில் டாப் நடிகையாக திகழ்ந்து வந்தார். அவரது சொந்த வாழ்க்கையில் காதல்தான் அவரது வாழ்க்கையை சீரழித்தது. ஆக்ஷன் ஹீரோ பாபு ஆண்டனியுடனான காதல் முறிவில் தொடங்கிய அவரது வாழ்க்கை சிக்கல்கள், பின் இரண்டு தோல்வியடைந்த திருமணங்கள் வரை சென்றது. கடல் என்ற படத்தில் இருவரும் நடித்தபோது முதன்முறையாக சந்தித்தனர்.

வாழ்க்கையை நாசமாக்கிய காதல்..கசப்பான 2 திருமணம்!! நடிகை சார்மிளாவின் வாழ்க்கை வீழக்காரணம்.. | Charmila Babu Antony Relationship Marriages

அதன்பின் ராஜதானி, கம்போளம் போன்ற படங்களிலும் இருவரும் இணைந்து நடித்தனர். அப்போது அவர்களுக்குள் காதல் மலர, மொத்தம் 6 படங்களில் இருவரும் ஜோடியாக நடித்தனர். 4 ஆண்டுகள் காதலித்து வந்த சார்மிளாவும் பாபு ஆண்டனியும் இறுதியில் பிரிந்தனர். ஒருக்கட்டத்தில் தன்னுடைய தந்தைக்கு பாபு ஆண்டனியை பிடிக்கவே இல்லை, என்பதால் இருவரும் பிரிந்துவிட்டார்.

வாழ்க்கையை நாசமாக்கிய காதல்..கசப்பான 2 திருமணம்!! நடிகை சார்மிளாவின் வாழ்க்கை வீழக்காரணம்.. | Charmila Babu Antony Relationship Marriages

அதுகுறித்து சார்மிளா பேசுகையில், 4 ஆண்டுகள் நாங்கள் காதலித்தோம், கிட்டத்தட்ட திருமணம் செய்யாமல் வாழும் உறவில் வாழ்ந்தோம், ஆனால் என் தந்தைக்கு அவரைப்பிடிக்கவில்லை, பாபுவை அவர் வெறுத்தார். முதலில் அவர் என்னைவிட வயதில் மிகவும் மூத்தவர், அதன்பின், பாபுவை பற்றி சில மோசமான விஷயங்களை என் தந்தை கேள்விப்பட்டிருந்தார். ஆனால் அது என்ன என்பதை அவர் என்னிடம் சொல்லவில்லை என்று ஜே பி ஜங்ஷன் நிகழ்ச்சியில் கூறியிருக்கிறார்.

அதன்பின் சார்மிளா மோசமான மனநிலைக்கு தள்ளப்பட்டார். சார்மிளாவின் வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சைகள் அத்துடன் முடிவுக்கு வந்தது. பாபு ஆண்டனி உடனான காதல் முறிவுக்குப்பின், உதவி இயக்குநராக பணியாற்றிய திரைப்பட, தொலைக்காட்சி நடிகர் கிஷோர் சத்யாவுடன் நெருக்கம் ஏற்பட்டு இருவரும் அதன்பின் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் அத்திருமணம் அவரது முந்தைய காதல் தோல்வியைவிட மிகப்பெரிய தோல்வியாக அமைந்தது.

வாழ்க்கையை நாசமாக்கிய காதல்..கசப்பான 2 திருமணம்!! நடிகை சார்மிளாவின் வாழ்க்கை வீழக்காரணம்.. | Charmila Babu Antony Relationship Marriages

அதன்பின் அவரது திரையுலக வாழ்க்கயில் சரிவை சந்தித்தார். திருமணத்திற்குப்பின் திரைப்படன்களில் நடிப்பதை சார்மிளா நிறுத்த வேண்டும் என்று கிஷோர் கூறியதால் ஷார்ஜாவுக்கு சென்றுவிட்டார். விக்ரமுக்கு ஜோடியாக சேது திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது, ஆனால் கிஷோருக்கு அது பிடிக்காது என்று நினைத்து அந்த வாய்ப்பை நான் நிராகரித்துள்ளார். 4 ஆண்டுகள் அங்கேயும், இங்கேயும் இருந்தார்.

கிஷோரும் என் பிரபலத்தை பயன்படுத்தத்தான் என்னை திருமணம் செய்து கொண்டார் என்பதையும் புரிந்து கொண்டேன், அதன்பின் இருவரும் பரஸ்பரமாக விவாகரத்து செய்துவிட்டோம். இருந்தாலும் இன்னொரு திருமணம் செய்து கொள்ள முடிவு செய்த சார்மிளாவுக்கு ராஜேஷ் என்ற மென்பொருளாலரை திருமணம் செய்து கொண்டார். சார்மிளாவை விட 8 வயது முத்தவர் தான், நான் கிறித்தவர் என்பதால் என்னை இந்து மதத்திற்கு மாறச்சொன்னார்.

பின் பல பிராத்தனைகளுக்குப்பின் எங்களுக்கு மகன் பிறந்ததால், அவனை கிறிஸ்தவ மதத்தை பின்பற்ற வேண்டும் என்று விரும்பினேன். சட்டரீதியாக தற்போது நாங்கள் விவாகரத்து பெற்றுவிட்டோம், இருந்தாலும் அவருடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறேன். நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றபோதும், என் மகன் என்னுடன் இருக்க விரும்பபுவதாக கூறினான், ராஜேஷும் அடிக்கடி வந்து எங்கள் மகனை சந்தித்து செல்கிறார் என்று தன் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.