4 இல்ல 50 கல்யாணம் கூட வனிதா பண்ணட்டும்.. ஆனா.. பிரபலம் கொடுத்த ஷாக்..
வனிதா - ராபர்ட் மாஸ்டர்
சந்திரலேகா என்ற படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்து நடிகையானவர் நடிகை வனிதா விஜயகுமார். அப்பா விஜயகுமார் மீது சண்டைப்போட்டு பிரபலமான வனிதா பிக்பாஸ் 3 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார். அதன்பின் பிட்டர் பால் என்பவரை மூன்றாவது முறை கல்யாணம் செய்து சில நாட்களிலேயே பிரிந்தார்.
அதன்பின் தன் இரு மகளின் எதிர்காலத்திற்காக படங்களில் நடித்து வருகிறார். சில நட்களுக்கு முன் ராபர்ட் மாஸ்டருடன் திருமணம் செய்வது போன்று இருக்கும் ஒரு போஸ்டரை வனிதா வெளியிட்டார். இருவருக்கும் திருமணமா என்ற சந்தேகம் எழுந்த நிலையில் ஒரு படத்தின் பிரமோஷனுக்கு பயன்படுத்திய ஒரு ஐடியா தான், Save the date போஸ்டர்.
பத்திரிக்கையாளர் சே குவேரா
இதுகுறித்து பத்திரிக்கையாளர் சே குவேரா, சில கருத்துக்களை கூறியிருக்கிறார். அதில் இந்த விஷயத்தில் சோஷியல் மீடியாக்களில் பேசுவதை எல்லாம் கருத்தில் எடுத்துக்கொள்ள முடியாது. இந்த சமுதாயத்தில் மனைவி இறந்துவிட்டால், அந்த குழந்தைகளை பார்த்து கொள்ள கணவர் 2ஆம் திருமணம் செய்து கொள்கிறார்.
ஆனால் கணவர் இறந்துவிட்டால் அந்த பெண் 2வது திருமணம் செய்து கொள்ளமுடியாத நிலை தான் இன்றும் இருக்கிறது. அதற்கு காரணம் அந்த பெண்ணிற்கு இருக்கும் மகளை, 2ஆம் திருமணம் செய்து கொணவர் மகளாக பார்ப்பாரா? என்ற சிக்கல் இருக்கிறது. வனிதா விஷயத்தி அவரின் தனிப்பட்ட வாழ்க்கை எப்படி இருந்தது, எப்படி வளர்க்கப்பட்டார் என்பதை பார்க்க வேண்டும்.

வனிதா அளித்த பேட்டி
அவருக்கும் பெற்றோருக்கும் சொத்து பிரச்சனை வந்தபோது வனிதா அளித்த பேட்டியில், அந்த வீடு எனக்கு சொந்தம், என் உழைப்பில் வாங்கியது முதல் விஜயகுமாரின் குடும்பம் மற்றும் கணவர் குறித்து பல திடுக்கிடும் விஷயத்தை வனிதா அந்த பேட்டியில் பேசினார்.
எது பிரச்சனைக்கு காரணம்
வனிதா வாழ்க்கையில் இப்படி பல சிக்கல்கள் இருப்பது பலருக்கு அவர் மேல் அனுதாபம் தான் வருகிறது. முதல் திருமணம் முறிந்துவிட்டு அடுத்த திருமணமும் ஒத்துவரவில்லை என்று மூன்றாவதாக திருமணம் செய்தார். கடைசியில் அவர் இறந்தேவிட்டார்.
வனிதா 4 அல்ல 50 கல்யாணம் கூட செய்து கொள்ளலாம், ஆனால் பிரிவுக்கு காரணம் என்ன பணமா, ஈகோவா? எது பிரச்சனைக்கு காரணம் என்று பார்க்க வேண்டும். அதைவிட்டுவிட்டு இவன் வேண்டாம் அவன் வேண்டாம் என்று போய்க்கொண்டே இருந்தால் என்ன அர்த்தம் என்று சே குவேரா விமர்சித்து பேசியிருக்கிறார்.