மணிமேகலைக்கு இவ்வளவு பணம் ஏது? ஏன் வயிறு எரியுது!! பதிலடி கொடுத்த பிரபலம்..
மணிமேகலை
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமான மணிமேகலை, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக பங்கேற்றபோது ஏற்பட்ட பிரச்சனையால் விஜய் தொலைக்காட்சியில் இருந்து விலகி, ஜீ தமிழ் டிவிக்கு மாறினார். இதனையடுத்து யூடியூப் மூலமும், விளம்பரங்கள் மூலம் சம்பாதித்து புதிய வீட்டை கட்டி முடித்தார். சமீபத்தில் அந்த வீட்டின் புதுமனை புகுவிழா நிகழ்ச்சியை நடத்தினார்.

இந்நிலையில் சினிமா விமர்சகர் சேகுவாரா, மணிமேகலை பற்றி பேசி சர்ச்சையை கிளம்ப்பியுள்ளார். அதில், ஒரு பெண் சொந்தமாக வீடு கட்டிவிட்டார் என்பதற்காகவே அவைரை தவறான பார்வையில் பார்ப்பது மிகவும் வக்கிரமான குணம். இருவருக்கு சொத்துக்கள் பல வழிகளில் வரும்.
புதிய வீடு
அவர்களுக்கு பரம்பரை சொத்துக்கள் இருந்திருக்கலாம், அந்த பரம்பரை சொத்துக்களின் மதிப்பு அதிகமாக உயர்ந்தபோது விற்று புது வீடு கட்டி இருக்கலாம். அவரது கணவர் உசைன் சம்பாதித்து இருக்கலாம், குடும்பத்தில் நடந்த பாகப்பிரிவினை மூலம் பணம் வந்து இருக்கலாம். ஒரு நடிகையோ, பெண் பிரபமோ சொத்து வாங்கிவிட்டால், உடனே அதன் பின்னணியில் சந்தேகத்தை கிளப்புவது என்பது மிகவும் தவறு. பல பேருக்கு பல வழிகளில் பணம், சொத்துகள் வரும். அதற்காக அனைத்தையும் தவறாக பேசக்கூடாது.
மணிமேகலை ஏதோ நேற்று வந்து இன்று பிரபலமானவர் இல்லை, அவர் கடந்த பல வருடங்களாக சின்னத்திரையில் முன்னணி தொகுப்பாளினியாக கடுமையாக உழைத்து வருகிறார். விஜய் டிவியின் டாப் ஷோக்களில் பணியாற்றி இருக்கிறார். அப்படியிருக்கும் போது, ஒரு பெண் முன்னேறுவதை பார்த்து பொறாமைப்பட்டுக் கொண்டு எதை பற்றியும் முழுமையாக தெரியாமல் இப்படி தேவையில்லாமல் விமர்சனம் செய்யக்கூடாது என்று மணிமேகலைக்கு ஆதரவாக சேகுவாரா பேசியுள்ளார்.