சென்னை யாருக்கு சொந்தம், பா.ரஞ்சித்தை மறைமுகமாக தாக்கிய சேரன்

Cheran Pa. Ranjith
By Tony Jul 26, 2024 03:30 AM GMT
Report

சேரன் தமிழ் சினிமாவில் ஆட்டோகிராப், வெற்றிக்கொடி கட்டு, தவமாய் தவமிருந்து போன்ற பல தரமான படைப்புக்களை கொடுத்தவர்.

இவர் சமீபத்தில் ஒரு சர்ச்சை கருத்தை கூறியுள்ளார். இதில், யோகிபாபு நடித்த போட் படத்தை சமீபத்தில் பார்த்ததாகவும், தனக்கு அந்த படம் மிகவும் பிடித்ததாக கூறியிருந்தார்.

சென்னை யாருக்கு சொந்தம், பா.ரஞ்சித்தை மறைமுகமாக தாக்கிய சேரன் | Cheran Indirectly Talk About Pa Ranjith

அதே நேரத்தில் சென்னை யாருக்கு சொந்தம், என்பதையும் குறிப்பிட்டு ஒரு கருத்தை வெளியிட்டு இருந்தார்.

பா.ரஞ்சித் சமீபத்தில் சென்னை எங்களுக்கு சொந்தம், நாங்கள் இல்லாமல் சென்னையில் ஜெயித்துட முடியுமா என்று பேசியது குறிப்பிடத்தக்கது.