கெனிஷா, ரவி மோகன்-கு கொடுத்த அழுத்தம்..ரவி - ஆர்த்தி மகன்களால் பிரிவா!! பிரபலம் கொடுத்த தகவல்..

Gossip Today Aarti Ravi Kenishaa Francis Ravi Mohan
By Jai May 17, 2026 11:00 AM GMT
Report

ரவி மோகன்

நடிகர் ரவி மோகன் தன்னுடைய மனைவி ஆர்த்தி குறித்து பேசிய விஷயம் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. எங்கு போனாலும் ரவி - ஆர்த்தி - கெனிஷா பற்றிய விவாதங்கள் நடந்து வரும் நிலையில், மூத்த பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு பேட்டியொன்றில் சில கருத்துக்களை கூறியுள்ளார்.

கெனிஷா, ரவி மோகன்-கு கொடுத்த அழுத்தம்..ரவி - ஆர்த்தி மகன்களால் பிரிவா!! பிரபலம் கொடுத்த தகவல்.. | Cheyyaru Balu Claims Kenishaa Ravi Aarti Isssues

அதில், ரவி மோகன் ஸ்டூடியோ என்ற ஒன்றை ரவி ஆரம்பித்தார். தங்குவதற்கே இடமில்லை, காரை பிடுங்கிவிட்டார்கள் என்று சொன்னவருக்கு ஏது இவ்வளவு பணம். வெளிநாட்டில் இருந்து பெரிய பணக்காரர் ஒருவர் இன்வெஸ்ட் செய்திருக்கிறார். அரசியல் புள்ளியின் மருமகன் ஒருவர் இன்வெஸ்ட் செய்திருக்கிறார் என்ற தகவல் வந்தன. யோகிபாபுவை வைத்து ஒரு படத்தை ஆரம்பித்தார்கள், எல்லாம் நன்றாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது.

திடீரென ஒரு ப்ரஸ் மீட் வைத்திருக்கிறார். ரவியை இதற்குமுன் இப்படி பார்த்ததே இல்லை, சினிமா பின்னணியுள்ள குடும்பத்தில் இருந்து இங்கு வந்தாலும் அதை தக் வைக்க திறமை வேண்டும். இந்த இடம் எவ்வளவு முக்கிய இடம், என்னை தொடர்ந்து டார்கெட் செய்கிறார்கள் என்கிறார்.

நான் யாருடன் இருந்தால் என்ன பிரச்சனை என கேட்கிறார். அவர் 3 எழுத்து இட்லி நடிகையை குறிப்பிட்டிருக்கிறார். அந்த நடிகை தான் ரவி - ஆர்த்தி திருமணத்திற்கு அச்சராமாக இருந்தவர். ரவி கதறி அழுததை பார்த்து என் மன கஷ்டப்பட்டுவிட்டது. ஆர்த்தி தரப்பும் ரவி தரப்பும் மாறிமாறி குற்றம் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். கிட்டத்தட்ட அடிமையாக இருந்தேன் என்று ரவி கூறுகிறார்.

கெனிஷா, ரவி மோகன்-கு கொடுத்த அழுத்தம்..ரவி - ஆர்த்தி மகன்களால் பிரிவா!! பிரபலம் கொடுத்த தகவல்.. | Cheyyaru Balu Claims Kenishaa Ravi Aarti Isssues

மகன்களால் பிரிவா

மகன்களிடம் இருந்து தள்ளி இருக்க வேண்டும், ஒரு மகனை லண்டனுக்கும், ஒரு மகனை மும்பைக்கும் அனுப்பிட வேண்டும் என்று கெனிஷா, ரவியிடம் கூறியதாக பேச்சு எழுகிறது. அதனால்தான் அவர்களுக்குள் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. யாருமே குழந்தைகளை விட்டுக்கொடுக்க மாட்டார்கள். பிரபுதேவா - நயன் தாரா விஷயத்திலும் இதேமாதிரியான கோரிக்கையை நயன் தாரா வைத்தார். அதை பிரபுதேவா ஏற்றுக்கொள்ளவில்லை. ரவிக்கு கெனிஷா தொடர்ச்சியாக கொடுத்த அழுத்தமும் இதுதான்.

கெனிஷா, ரவி மோகன்-கு கொடுத்த அழுத்தம்..ரவி - ஆர்த்தி மகன்களால் பிரிவா!! பிரபலம் கொடுத்த தகவல்.. | Cheyyaru Balu Claims Kenishaa Ravi Aarti Isssues

இதனால்தான் வெகுண்டு எழுந்தார். கெனிஷா போய்விட்டதால் ரவி மோகன் வெறிப்பிடித்த மனிதர் போலாகிவிட்டார் என்று இன்னொரு தரப்பினர் கூறுகிறார்கள். பெண் பாவம் மட்டுமில்லை, ஆண் பாவமும் பொல்லாதது. பொதுவாக பெண் மனது தைரியமாக இருக்கும். ஆணின் மனது அப்படி இல்லை, ரவி மோகன் கதறி அழுத வீடியோவை பார்க்கையில் கல் நெஞ்சம்கூட கரையும்படிதான் இருக்கிறது என்று செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.