ஷாலினியை திருமணம் செய்ய ஒரு கோடி பணம் கேட்ட தந்தை!! அஜித் திருமணம் செய்தது இப்படித்தான்...
தமிழ் சினிமாவில் தன் உழைப்பால் யாருடைய தயவும் இன்றி முன்னேறி வந்தவர் நடிகை அஜித் குமார். தற்போது விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக இருந்து வருகிறார். இடையில் தன் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டும் சென்றார்.
இந்நிலையில், பிரபல சினிமா விமர்சகர் செய்யாறு பாலு அவரது யூடியூப் பக்கத்தில் அஜித் மற்றும் அவரது மனைவி ஷாலினி காதல் விவகாரம் குறித்த தகவலை பகிர்ந்து கொண்டுள்ளார். ஷாலினி சாதாரண விட்டு குடும்பத்தை சேர்ந்தவர். அமர்க்களம் படத்தின் போது அஜித், ஷாலினியிடம் காதலை சொல்ல தவித்தார்.
ஷாலினிக்கு, படத்தின் ஆரம்பத்திலேயே அஜித்தை பிடித்துள்ளதாகவும் வீட்டில் சொல்ல மதம் பிரச்சனையாக வருகிறது, அதையும் தாண்டி காதல் தான் முக்கியம் என்று ஓகே சொல்லி விடுகிறார்கள் பெற்றோர்கள். இந்த சமயத்தில் மீடியாக்களில் வந்த ஒரு விசயம் வருகிறது, அது உண்மையா? இல்லையா? என்று தெரியவில்லை.
அதாவது ஷாலினியை திருமணம் செய்ய, அஜித் ஒரு கோடி ரூபாய் கொடுத்திருக்கிறார். அதை கொடுத்தால் தான் நான் திருமணம் செய்து வைப்பதாக ஷாலினி தந்தை பாபு கூறியிருக்கிறார். அதனால் அஜித் ஒரு கோடி ரூபாய் கொடுத்ததாகவும் மீடியாக்களில் செய்தி வெளியானது. இது எந்தளவிற்கு உண்மை என்று தெரியவில்லை என்றும் இதை ஷாலினி பேட்டியில் சொன்னால் தான் உண்டு என்றும் செய்யாறு பாலு கூறியிருக்கிறார்.
மேலும், திருமணத்திற்காக ஷாலினியின் ஜாதகத்தை வாங்கி கொண்டு, அஜித் வீட்டினர் பெரிய ஜோதிடரிடம் காமித்துள்ளனர் எல்லா பொருத்தமும் பக்காவாக இருக்கிறது என்று கூறினாராம்.
சரண் ஒரு பேட்டியொன்றில், அஜித் பிறந்த நாளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க, அஜித்திற்கு பிடித்த பொருளை வாங்கி அவரது வீட்டில் வைத்து இரவோடு இரவாக சென்றிருக்கிறார் ஷாலினி. இந்த புரிதலுடன் இப்படியொரு அந்நியோன்யமாக இருக்கிறார்கள் அஜித் - ஷாலினி என்று கூறினார் செய்யாறு பாலு.