சீரியல் ஷூட்டிங்கில் 10 மாத குழந்தையை 3 மணி நேரம் அழவைத்த இயக்குனர்..

Serials Gossip Today
By Edward Oct 21, 2022 09:00 PM GMT
Report

சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் குழந்தைகள் நடிப்பதற்காக பெற்றோர்களின் அனுமதியுடன் ஷூட்டிங்கில் நடிக்க வைப்பார்கள். அப்படி பிறந்த குழந்தை முதல் சிறு வயது குழந்தைகள் வரை படங்களில் சீரியல்களில் நடிக்க வைத்து வருகிறார்கள்.

அப்படி பிரபல தொலைக்காட்சி சேனலின் ஒரு சீரியலில் 10 மாத குழந்தையை நடிக்க வைத்துள்ளனர். அப்போது குழந்தை அழும் காட்சிக்காக சுமார் 3 மணி நேரம் அழவைத்திருக்கிறார்கள் சீரியல் குழு.

இதனால் குழந்தைக்கு நாக்கு வரண்டும் மூக்கில் தண்ணீரும் வர ஆரம்பித்துவிட்டது. இதுகுறித்து குழந்தையின் பெற்றோர்கள் கூறுகையில், இப்போது குழந்தைக்கு விவரம் தெரிய ஆரம்பித்ததால் யாருடன் சென்றாலும் அழ ஆரம்பித்துவிடுகிறார்.

அதனால் யாரிடமும் போக மறுத்து வருவதாகவும் போதும் என்று நான் கூறியும் இன்றுடன் முடிந்துவிடும் என்று சொன்னார்கள் சீரியல் குழு என்று கூறியுள்ளார்.

அந்த நேரம் அப்படி ஆனதால் தண்ணீர் கூட கொடுக்க முடியவில்லை, குழந்தை அழுவதை கூட யாரும் கண்டுக்கொள்ளாமல் ஷூட் செய்துள்ளனர் என்று கூறியிருக்கிறார்கள்.

இதுபோன்ற பல சீரியல்களில் இப்படியான சம்பவம் நடந்து வருவதால் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவும் குழந்தையின் பாதுகாப்புக்கு நல்ல தீர்வு காணவும் செய்யவேண்டும் என்ற கோரிக்கை எழுப்பியுள்ளனர்.