உங்க பாட்டை வப்பாட்டி தானே பாடுச்சு!! சின்மயியை வெளுத்து வாங்கிய பிரபலம்...
இயக்குநர் மோகன் ஜி இயக்கியுள்ள திரெளபதி 2 படத்தின் எம்கானோ என்ற பாடல் சில நாட்களுக்கு முன் வெளியானது. ஜிப்ரான் இசையொல் பாடகி சின்மயி இப்பாடலை பாடியிருக்கிறார்.
சின்மயி
மோகன் ஜி படத்தின் பாடல் என்று தெரியாது, முன்பே தெரிந்திருந்தால் ஒருபோதும் அந்த பாடலை பாடியிருக்கமாட்டேன் என்றும் அந்த கொள்கைக்கும் எனக்கும் நிறைய முரன்பாடுள்ளது, இதுதான் உண்மை என்று பதிவிட்டார்.

இதற்கு மோகன் ஜி, என்னுடன் திரெளபதி 2 படத்தில் பணியாற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள், நடிகைகள், யாரையும் குறி வைத்து தாக்க வேண்டாம், திரெளபதி 2 படம் பேசுவது என் சொந்த சிந்தனை.
என்னுடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இணைந்து பணியாற்றும் எந்த நபரையும் குறி வைத்து தாக்குவது கோழைத்தனம் என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில் சின்மயி-யின் இந்த மன்னிப்பு பதிவுக்கு மதுவந்தி எதிர்ப்பு தெரிவித்து, கேள்வியும் கேட்டுள்ளார்.

வப்பாட்டி தானே பாடுச்சு
சினிமாவில் இருக்கும்போது ஒவ்வொரு படத்திலும் தன்னுடைய கொள்கைக்கும் கருத்துக்கும் ஒத்துப்போன பாடல்களை மட்டுமேதான் பாடியிருக்கிறாரா சின்மயி. முத்த மழை பாட்டு படத்தில் எந்த கேரக்டர் பாடிச்சு? படத்தோட ஹீரோவோட வப்பாட்டிதானே பாடினாங்க? அப்போ அந்த படத்தில் அந்த விஷயத்தை ஆதரிச்சு பாடினீங்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் ஒரு கலைஞர் எல்லா பாத்திரங்களுக்கும் உழைப்பு கொடுக்க வேண்டியது தானே. சினிமாவில் கொள்கையோடதான் இருக்க முடியும் என்றால் நம்பியார் வில்லனாக நடிச்சிருக்க முடியாது, எங்க அப்பா பெரியார் படத்தில் நடிச்சிருக்கவே கூடாது. சினிமா என்பத் ஒரு கலை வடிவம் தானே தவிர, தனிப்பட்ட கொள்கையை பிரதிபலிக்க வேண்டிய இடமில்லை என்பதை மதுவந்தி வலியுறுத்தியிருக்கிறார்.