காரில் பெண் இயக்குனரிடம் சில்மிஷம்! இளையராஜாவையும் விட்டுவைக்காத மீ டூ சின்மயி
சினிமாத்துறையில் பெண் கலைஞர்களுக்கு எதிராக பாலியல் ரீதியாக பல இன்னல்கள் நடந்து கொண்டிருப்பதாக பல நட்சத்திரங்களும் துறைச்சார்ந்த பெண்களும் ஓப்பனாக கூறி வருகிறார்கள். இப்படி செய்வோர்களுக்கு எதிராக பேசி வருபவர் பாடகி சின்மயி.
மீடூ பிரச்சனையை கையில் எடுத்து தினமும் இணையத்தில் பதிவிட்டு வரும் சின்மயி சமீபத்தில் இளையராஜாவை திட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் லீனா மணிமேகலை இயக்குனர் சுசிகணேசனை பேட்டியெடுத்து வீடு திரும்பியயுள்ளார் அப்போது லீனா மணிமேகலை நடந்து செல்வதையறிந்துகாரில் கூட்டிச்சென்றுள்ளார்.
காரில் ஆவரிடம் தகாதமுறையில் நடந்து கொண்டார் என்று ஓப்பனாக கூறினார் லீனா. இதற்கு பலர் எதிர்த்து சுசிகணேசனை திட்டி வந்தனர். இந்நிலையில் வஞ்சம் தீர்த்தாயடா என்ற படத்தினை இயக்கி வருகிறார்.
அப்படத்தின் இசையை இளையராஜா இசையமைக்க இருப்பதாக சமீபத்தில் புகைப்படத்துடன் பதிவினை போட்டுள்ளார். இதனை பார்த்த சின்மயி, இப்படி பாலியல் துன்புறுத்தல் செய்த இயக்குனருக்கு எப்படி வாய்ப்பு கொடுக்கிறீர்கள். எல்லாம் தெரிந்தும் இளையராஜா சாருக்கோ அவரது குழுவுக்கோ தெரியாதா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
Vanjam Theerthayada. Wow.
— Chinmayi Sripaada (@Chinmayi) January 7, 2022
That’s more or less what this director has been doing to Leena. Doesn’t Raja sir or his team know they are propping and working with a molester who is harassing the women who spoke up? https://t.co/YwVCckP1q4