நம்ம ஊர் பொறுக்கிங்க புத்தி இதுதான்.. வைரமுத்து சர்ச்சையால் கோபப்பட்ட பிரபல பாடகி..

Vairamuthu Gossip Today Chinmayi
By Edward Oct 23, 2022 09:45 AM GMT
Report

தென்னிந்திய சினிமாவில் பின்னணி பாடகியாக இருப்பவர் பாடகி சின்மயி. பல தமிழ் படங்களில் பாடிய சின்மயி 2014ல் இயக்குனர் ராகுல் ரவிந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி பல பாடல்களில் பாடி வந்த சின்மயி மீடு பிரச்சனைக்கு ஆதரவாக சமுக கருத்துக்களை இணையத்தில் பேசி வருகிறார்.

பலர் தன்னிடம் கூறும் பாலியல் தொல்லை தகவல்களை பகிர்ந்து அதற்காக பேசியும் வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன் வைரமுத்து தன்னை தவறாக நடத்தினார் என்று புகாரளித்து அவர் பற்றிய பல செய்திகளை கடுமையாக விமர்சித்தும் வருகிறார்.

சில மாதங்களுக்கு முன் 8 வருடங்களுக்கு பிறகு சின்மயிக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. இதன்பின் தன்னுடைய குழந்தைகளுக்கு தாய்ப்பாள் ஊட்டும் புகைப்படத்தை வெளியிட்டு விழிப்புணர்வு செய்துள்ளார் சின்மயி.

அந்த புகைப்படத்தை பற்றி தனியார் ஊடகம் இணையத்தில் பகிர்ந்ததற்கு ஒரு நபர் வைரமும் முத்தையும் போல இரண்டு குழந்தைகளும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன் என்ற கருத்தினை போட்டுள்ளார்.

இதற்கு பதிலடி கொடுத்து சின்மயியும் கோபத்தை வெளிக்காட்டினார். இதனை தொடர்ந்து வேறொருவர் வாழ்த்துக்கள் வைரமுத்து சார் என்ற கருத்தினை போட்டுள்ளார்.

தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர் பதிவிட்டதால் நம்ம ஊர் பொறுக்கிங்க தான், அவர்களின் ரத்தத்திலேயே ஊரியிருக்கிறது என்று கேலவப்படுத்தியிருக்கிறார்.