சுயமரியாதையை விட்டுக்கொடுக்காத தமிழ் செல்வி!! கண்ணம்மா பார்ட் 2ன்னு கலாய்க்கும் நெட்டிசன்கள்.
சின்ன மருமகள்
விஜய் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் சீரியல்களில் ஒன்றாக திகழ்ந்து வருவதுதான் சின்ன மருமகள் சீரியல். இந்த சீரியல் கடந்த 2024ல் இருந்து ஒளிப்பரப்பாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. தமிழ் செல்வியின் அப்பா செய்த தவறால், ராஜாங்கம் சிறையில் அடைக்கட்டு பல கொடுமைகளை சந்தித்து வருகிறார்.

இதற்கிடையில் இனிமேல் இந்த வீட்டில் காலெடி எடுத்து வைக்கமாட்டேன் என்று சபதம் போட்ட தமிழ் செல்வி, அம்மா வீட்டிற்கே செல்கிறார். இந்நிலையில் வரும் வாரம் எப்படி சீரியல் செல்லப்போகிறது என்று ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தற்போது இந்த வார பிரமோ வீடியோ வெளியாகியிருக்கிறது.
கண்ணம்மா பார்ட் 2
அதில், தமிழ் செல்வியின் தந்தை, ராஜாங்கம் வீட்டுக்கு சென்று மன்னிப்பு கேட்க, மருமகனான சேது கழுத்தை பிடித்து வீட்டைவிட்டு வெளியே தள்ளியுள்ளார்.

இதனையடுத்து வீட்டுக்கு வந்த தமிழ், அப்பாவிற்கு இப்படியொரு அவமானம் நடந்ததை நினைத்து கோபப்பட்டு, தன்னுடைய சுயமரியாதையை விட்டுக்கொடுக்காமல் மருத்துவராகி ஜெயிப்பேன் என்ற சபதத்தோடு படிக்க ஆரம்பிக்கிறார்.
அவரின் செயலை பார்த்த நெட்டிசன்கள் கையில் பேக், ஒருவேலை கண்ணம்மா பார்ட் 2வா இருக்குமோ என்று கலாய்த்து வருகிறார்கள்.