சீமான் சாருடன் நடந்த சம்பவம்!! LIK பட நடிகை க்ரித்தி ஷெட்டி ஓபன் டாக்..
LIK படம்
இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், க்ரித்தி ஷெட்டி, சீமான் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி(LIK). கடந்த ஆண்டு டிசம்பர் இப்படம் வெளியாகும் எதிர்ப்பார்த்த நிலையில், சில காரணங்களால் படம் தள்ளிப்போனது.

இதனைடுத்து சயின்ஸ் ஃபிக்ஷன் மற்றும் ரொமாண்டிக் காமெடி கலந்த ஒரு கதையாக உருவாகிய LIK படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி ரிலீஸ்யாகவுள்ளது.
படத்தின் டிரைலர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வரும் நிலையில் படத்தின் பிரமோஷனுக்காக நடிகை க்ரித்தி ஷெட்டி பேட்டிகளில் கலந்து கொண்டு வருகிறார்.

க்ரித்தி ஷெட்டி
சமீபத்தில் அவர் கலந்து கொண்ட பேட்டியில், இந்த மாதிரி எதிர்காலக் கதைக்கு ரெஃபரன்ஸ் கிடையாது. அதனால் எல்லாமே புதிதாக யோசித்து உருவாக்க வேண்டியிருந்தது.
அதற்காக விக்னேஷ் சிவன் ரொம்ப கஷ்டப்பட்டார். சீமான் சார் தூய தமிழில் பேசுவார், நிறைய ஆங்கில வார்த்தைகளுக்கு அவர் அழகான தமிழ் வார்த்தைகள் சொல்லித்தருவார். அவருடன் இருந்தது ஒரு நல்ல அனுபவம். நான் அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன்.