சின்னஞ்சிறு கிளியே எபிசோட் அப்டேட்: திவாகர் நிச்சயதார்த்தம் நடக்குமா? ஜெயந்தி எடுத்த அதிர்ச்சி முடிவு!

Serials Zee Tamil Tamil TV Serials
By Jai Nov 12, 2026 06:44 PM GMT
Report

சின்னஞ்சிறு கிளியே

Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் 'சின்னஞ்சிறு கிளியே'. இந்தத் தொடரில் தற்போது அடுத்தடுத்து பல பரபரப்பான திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. வாழ்க்கையே முடிந்துவிட்டதாக நினைக்கும் ஜெயந்தி... தன்னுடைய வாழ்க்கை முடிந்துவிட்டது, இனி எதுவுமே செய்ய முடியாது என்று நினைத்து ஜெயந்தி மனமுடைந்து அழுது கொண்டிருக்கிறாள். அவளுடைய அம்மாவும் நடப்பதைப் பார்த்து என்ன செய்வதென்று தெரியாமல் புலம்புகிறார்.

சின்னஞ்சிறு கிளியே எபிசோட் அப்டேட்: திவாகர் நிச்சயதார்த்தம் நடக்குமா? ஜெயந்தி எடுத்த அதிர்ச்சி முடிவு! | Chinna Siru Kiliye Serial 12Th Edisode Preview

அந்த நேரத்தில் அங்கு வரும் கர்ணா, ஜெயந்தி பாவம் என்று பேசுகிறான். இதைக் கேட்ட விஷ்வா அவனைத் திட்டி அங்கிருந்து அனுப்பிவிடுகிறான். மறுபக்கம், கிருபாவும் கர்ணாவை அழைத்து நிச்சயதார்த்த வேலைகளை மட்டும் கவனிக்கச் சொல்லி அனுப்புகிறான். வேலைக்காரியாக இருந்தாலும் பரவாயில்லை... ஜெயந்தியின் கண்ணீர் முடிவு! எப்படியாவது இந்த நிச்சயதார்த்தத்தை நிறுத்திவிட வேண்டும் என்று நினைக்கும் இந்து, ஜெயந்தியை அழைத்துக்கொண்டு எல்லோர் முன்னிலையிலும் வருகிறாள். ஆனால், அங்கு வரும் ஜெயந்தி யாரும் எதிர்பார்க்காத ஒரு முடிவைச் சொல்கிறாள்.

"இந்த நிச்சயதார்த்தம் நடந்தாலும் பரவாயில்லை. என்னை மட்டும் வீட்டை விட்டு அனுப்பிவிடாதீர்கள். நான் இந்த வீட்டிலேயே வேலைக்காரியாக இருந்துகொள்கிறேன்" என்று சொல்லி கதறி அழுகிறாள். ஜெயந்தி இப்படிப் பேசுவதைக் கேட்டு இந்து அதிர்ச்சியடைகிறாள். திவாகரோ அவளை வீட்டை விட்டுப் போகச் சொல்கிறான். ஆனால், இதற்கு கிருபா தடை போடுகிறான். "அவள் இங்கேயே வேலைக்காரியாக இருக்கட்டும். நிச்சயதார்த்தம் கண்டிப்பாக நடக்கும்" என்று திட்டவட்டமாகச் சொல்கிறான்.

சின்னஞ்சிறு கிளியே எபிசோட் அப்டேட்: திவாகர் நிச்சயதார்த்தம் நடக்குமா? ஜெயந்தி எடுத்த அதிர்ச்சி முடிவு! | Chinna Siru Kiliye Serial 12Th Edisode Preview

கட்சித் தலைவரைச் சந்திக்கும் இந்து... கிடைத்த வாக்குறுதி! ஒருபக்கம் கர்ணா என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்க, இந்துவும் சித்ராவும் சேர்ந்து கட்சித் தலைவரைப் பார்க்கச் செல்கிறார்கள். திவாகருக்கு நடக்கவிருக்கும் இரண்டாவது திருமணத்தை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்று இந்து அவரிடம் முறையிடுகிறாள். இதைக் கேட்ட கட்சித் தலைவரும் நேரில் வந்து இந்தத் திருமணத்தை நிறுத்துவதாக வாக்குறுதி கொடுக்கிறார். இதனால் இந்துவுக்கும் சித்ராவுக்கும் கொஞ்சம் நிம்மதி கிடைக்கிறது.

கடைசி நேரத்தில் வந்த போன்... மாறிய நிலைமை! கட்சித் தலைவர் வந்துவிடுவார் என்ற நம்பிக்கையுடன் இந்து கிளம்புகிறாள். ஆனால், வழியிலேயே தீபாவிடம் இருந்து அவளுக்கு போன் வருகிறது. குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்ற தகவல் கிடைத்ததும், இந்து உடனடியாகக் குழந்தையைப் பார்க்கச் சென்றுவிடுகிறாள். இதற்கிடையில், வீட்டில் நிச்சயதார்த்த ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து கொண்டிருக்கின்றன. கட்சித் தலைவர் இன்னும் வரவில்லையே என்று சித்ரா பதற்றத்துடன் காத்திருக்கிறாள்.

அந்த நேரத்தில் அங்கு வரும் கிருபா, சித்ரா மற்றும் அங்கிருக்கும் பெண்களை மிரட்டி நிச்சயதார்த்த வேலைகளைப் பார்க்கச் சொல்கிறான். வேறு வழியில்லாமல் கர்ணாவும் அந்த வேலைகளைச் செய்யத் தொடங்குகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சின்னஞ்சிறு கிளியே சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.