அலைபாயுதே லவ் ப்ரோபோசலை மிஞ்சிட்டாரே!! லதாவிடம் ரஜினி எப்படி ப்ரோபோஸ் செய்தார் தெரியுமா?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் 2 படத்தை தொடர்ந்து தன்னுடைய 174வது படத்தினை கமல் தயாரிப்பில் நடிக்கவுள்ளார். அதற்காக இயக்குநர் தேர்வு நடைபெற்றும் வருகிறது.
இந்நிலையில் ரஜினிகாந்த், தன்னுடைய மனைவி லதாவிற்கு எப்படி ப்ரோபோஸ் செய்தார் என்ற தகவல் யாரும் தெரியாத நிலையில், அதுபற்றி தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

லதாவிடம் ரஜினி ப்ரோபோஸ்
அதாவது ஒரு படத்தின் ஷூட்டிங்கின் போது ரஜினியை பேட்டி எடுக்க வந்தபோதுதான் ரஜினிக்கும் லதாவிற்கும் இடையே முதல் அறிமுகம் கிடைத்துள்ளது. பார்த்ததுமே காதலில் விழுந்துவிட்டார் ரஜினி. ஆனாலும் எப்படி காதலை சொல்வது என்று தெரியாமல் இருந்துள்ளார்.
அப்போது லதா, நான் கேட்ட ஒரு கேள்விக்கு குடும்பபாங்கான பெண் கிடைத்தால் திருமணம் செய்துகொள்வேன் என்று சொன்னீர்கள். குடும்ப பாங்கு என்றால் என்ன அர்த்தம், அதை நீங்களே கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்கள் என்று ரஜினியிடம் கேட்டுள்ளார் லதா.

உன்னை மாதிரி ஒரு பெண்
அதற்கு ரஜினி, இதுதான் சந்தர்ப்பம் என்று மனதில் நினைத்துக்கொண்டிருந்ததை உடைத்துள்ளார். அதில், குடும்ப பாங்கான பெண் என்றால் அழகாக இருக்க வேண்டும், கம்பீரமாக இருக்கவேண்டு, அதேபோல் மென்மையாகவும் இருக்க வேண்டும். இவை மட்டுமின்றி புத்திக் கூர்மையாகவும் இருக்க வேண்டும். அதாவது உன்னை மாதிரி ஒரு பெண் வேண்டும். அப்படி இருந்தால் உடனடியாக நான் திருமணம் செய்துகொள்வேன் என்று கூறிவிட்டாராம்.
இதனை கேட்டு லதா மட்டுமின்றி அருகே இருந்தவர்களும் ஷாக்காகிவிட்டார்களாம். லதா, ஒய்.ஜி மகேந்திரனின் உறவுக்கார பெண்தான். அதனால் விஷயத்தை அவரிடம் ரஜினி சொல்ல, அடுத்தடுத்த நடவடிக்கைகள் எல்லாம் ஜோராக நடிக்க, லதா வீட்டில் நீண்ட தயக்கத்துக்குப்பின் சம்மதம் கிடைத்துள்ளது. திருப்பதியில் வைத்து லதாவை ரஜினிகாந்த் திருமணம் செய்துகொண்டார்.