நீச்சல் உடையை வைத்து விளம்பரம் தேடிய தயாரிப்பாளர்!! கெஞ்சிய கூத்தாடிய 54 வயது நடிகை
ஊர்வசி
80 களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை ஊர்வசி. இவர் பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான "முந்தானை முடிச்சு" என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
நீச்சல் உடை
இதையடுத்து பல படங்களில் நடித்து வந்த இவர், இயக்குனர் மணிவண்ணன் இயக்கத்தில் 1984 -ம் ஆண்டு வெளியான "அம்பிகை நேரில் வந்தாள்" என்ற படத்தில் நடித்திருந்தார்.
இப்படத்தில் மோகன், ராதா என பல முன்னணி பிரபலங்கள் நடித்திருந்தனர். இப்படத்தின் படப்பிடிப்பின் போது ஊர்வசி நீச்சல் உடையில் நடிப்பது போன்ற காட்சியை எடுக்கப் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
அந்த காலத்தில் நடிகைகள் இது போன்ற காட்சிகளில் நடிக்க முன்வர மாட்டார்கள். ஆனால் ஊர்வசி துணிச்சலாக அந்த காட்சியில் நடித்தார்.
அந்த காட்சி படமாக்கப்பட்ட பிறகு ஊர்வசி இப்படத்தின் தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம், "என்னுடைய நீச்சல் புகைப்படத்தை வைத்து திரைப்படத்தை விளம்பரம் செய்ய வேண்டாம்" என்று கேட்டுக் கொண்டாராம்.
இந்த சம்பவத்தை சீதா ராமன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.