நடிக்கனும்னு ஆசைபட்ட நடிகைகள் ஓடிபோய்டுறாங்க! சோகத்தில் நடிகர் விக்ரம்...
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து சியான் என்று ரசிகர்களால் பாசத்தோடு அழைத்து வருபவர் நடிகர் விக்ரம். அவர் நடித்த படங்களான மகான், கோப்ரா, துருவ நட்சத்திரம் என பல படங்கள் தற்போது சில காரணங்களால் தள்ளி சென்று வருகிறது.
சமீபத்தில் அவர் நடித்த மகான் படத்தின் டீசர் வெளியாகி மக்கள் மனதில் 3 கால ஆசையை தீர்த்துள்ளது. இந்நிலையில் விக்ரம் சமீபத்தில் டிடி தொகுத்து வழங்கிய பேட்டியில் கலந்து கொண்டு மனம் திறந்து பேசியுள்ளார்.
அப்போது நான் முன்னணி இயக்குனர்கள் தயாரிப்பாளர்களின் படங்களில் நடிக்க வேண்டும் என்று நினைக்கும் போது ரம்பா, ரோஜா, ஜோதிகா, சிம்ரன் போன்ற நடிகைகளுடன் நடிக்கனும்னும் நினைத்தேன்.
அப்போது அனைவரும் சினிமாவில் இருந்து ஓய்வு பெற்றது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. சிம்ரன் தற்போது மீண்டும் எண்ட்ரி கொடுக்க அவரை மகான் படத்தில் நடிக்க வேண்டும் என்று நான் விரும்பினேன். அதற்கு சிம்ரனும் நடித்து கொடுத்தார். சிம்ரன் ஒரு சிறந்த நடிகை, சூப்பர் டான்ஸர் என்றும் பாராட்டி பேசியுள்ளார் விக்ரம்.
இதில் நடிகை ஜோதிகாவுடன் மட்டுமே விக்ரம் அவர்கள் ஜோடிப்போட்டு நடித்திருக்கிறார். சிம்ரன் பிதாமகன் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடனமாடியுள்ளார். மற்றவர்களுடன் நடிக்காமல் இருந்ததை இப்படி கூறியிருக்கிறார் சியான் விக்ரம்.