ரம்யா கிருஷ்ணனுக்கும் இந்த பத்திரிக்கையாளருக்கும் உள்ள உறவு! உண்மையை உடைத்த ரஜினிகாந்த்..
சினிமாத்துறையில் பத்திரிக்கையாளர்களின் பங்கு அதிக பங்கு வகிக்கும். அப்படி பத்திரிக்கையும் சினிமாவிலும் கொடிக்கட்டி பறந்தவர்கள் பலர். அப்படி எம்ஜிஆர், சிவாஜி காலகட்டத்தின் அவர்களுடன் இணைந்து தனது சாதுரியமான நடிப்பை வெளிக்காட்டியவர் சோ.
தனது துக்ளக் தர்பார் என்ற பத்திரிக்கையின் மூலம் பல அரசியல் தலைவர்களை ஆட்டிப்படைத்தவர்.தற்போது வரை துக்ளக் தர்பார் பத்திரிக்கை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. சோ சகோதரியின் மகள் தான் நடிகை ரம்யா கிருஷ்ணன். ஆரம்பத்தில் ரம்யா கிருஷ்ணன் சினிமாவில் நடிக்க வருவது சோவுக்கு பிடிக்கவில்லையாம்.
இதனால் இவர்களுக்குள் பல கருத்து வேறுபாடுகள் இருந்துள்ளது. 13 வயதிலேயே சினிமாவிற்கு அறிமுகமாகிய ரம்யா கிருஷ்ணன் தமிழ், தெலுங்கு, மலையாளம் படங்களில் நடித்து கொடிக்கட்டி பறக்க முக்கிய காரணம் படையப்பா படம் தான். நீலம்பரி கதாபாத்திரம் அப்படி அமைந்திருக்கும்.
சோ ரஜினிகாந்துடன் படையப்பா படைத்தை பார்த்து ரம்யா கிருஷ்ணனை புகழ்ந்து தள்ளி சோ தனது வழக்கமான பாணியில் நைஸ் மேடம் கூறியுள்ளார். மேலும் இது போன்ற நல்ல கதாபாத்திரங்கள் மற்றும் நல்ல கதையை தேர்ந்தெடுத்து நடிக்குமாறு கூறியிருக்கிறாராம். இதை 16 வருடங்கள் கழித்து சூப்பர் ஸ்டார் கூறியுள்ளார்.