’சோ’ சொன்ன அந்த வார்த்தை!! கலைமாமணியை வாங்க மறுத்த கவிஞர் கண்ணதாசன்...
கவிஞர் கண்ணதாசன்
தமிழ் சினிமா கலைஞர்களுக்கு தமிழ்நாடு அரசு கலைமாமனி விருது யார் யாருக்கு என்ற லிஸ்ட்டினை வெளியிட்டுள்ளது. இந்த சூழலில் ’சோ’ சொன்ன ஒரு விஷயத்துக்காக கலைமாமணி விருதையே வாங்க மறுத்திருக்கிறார் கவிஞர் கண்ணதாசன்.
தமிழ் சினிமாவில் பல ஆயிரக்கணக்கான பாடலுக்கு பாடல் வரிகளை கொடுத்து இன்றும் மக்களின் எண்ண ஓட்டங்களுக்கு ஏற்றார் போலவும் துவண்டு விழும் நேரங்களில் தூக்கிவிடும் ஊன்றுகோலான வரிகளாக அமைவது கவிஞர் கண்ணதாசன் வரிகள் தான்.
நடிப்பின் மீது ஆசையில் 16 வயதில் சென்னைக்கு வாய்ப்பு தேடி வந்தார் கண்ணதாசன். நடிப்பு தேடி வந்தவருக்கு முதலில் எழுதக்கூடிய வாய்ப்பு கிடைக்க, பல படங்களில் நடித்தும் எழுதியும் வந்தார். அப்படி கன்னியின் காதலி என்ற படத்தில் கலங்காதிரு மனமே என்ற பாடலை எழுத ஆரம்பித்து சுமார் 4500 படங்களுக்கு பாடல்கள் எழுதியிருக்கிறார்.
6 படங்களை தயாரித்த அவர் ஏராளமான நூல்களையும் எழுதியிருக்கிறார். பல படங்களுக்கு கதை மற்றும் வசனம் எழுதியவர், 7 பத்திரிக்கைகளில் ஆசிரியர், எழுத்தாளர் போன்ற முக்கிய பொறுப்பிலும் இருந்துள்ளார்.
கலைமாமணி
54 வயதில் இதை செய்த கண்ணதாசன் அவர்கள், தனக்குத்தானே ’இரங்கற்பா’ எழுதிக்கொண்ட உலகின் ஒரே நபர் கண்ணதாசனாகத்தான் இருக்கும். அவர் இறுதியாக மூன்றாம் பிறை படத்தில் கண்ணே கலைமானே பாடலைத்தான் எழுதியிருக்கிறார்.
ஒருமுறை 77, 78 காலக்கட்டத்தில் கண்ணதாசனுக்கு கலைமாமணி விருது வழங்குவதாக முடிவெடுக்கப்பட்டு அறிவித்தனர். அப்போது உடனே கவிஞர் கண்ணதாசன், சோ அவர்களை தொடர்பு கொண்டு, இந்தமாதிரி எனக்கு கலைமாமணி விருது அறிவித்திருக்கிறார்கள், வாங்கவா வேண்டாமா என்று கேட்டுள்ளார்.
’சோ’ சொன்ன வார்த்தை
அதற்கு சோ, இந்த விருதை கொடுக்க ஆரம்பித்து 15 ஆண்டுகளாகிறது கவிஞரே, 15 வருடத்தில் முதல் 2 வருடத்திற்குள்ளேயே உங்களுக்கு அவர்கள் கொடுத்திருக்க வேண்டும், ஆனால் கொடுக்கவில்லை. கோட்டா சிஸ்டத்தில் வேண்டப்பட்டவர்களுக்கு கொடுத்துவிட்டு உங்களுக்கு இப்போது கொடுக்கிறார்கள்.
இதை வாங்குனீர்கள் என்றால் உங்களுக்கு ஒன்றும் மரியாதை கிடையாது, அந்த விருதுக்கு மரியாதை ஆகிவிடும், எனவே அதை வாங்க வேண்டாம் என்று கூறியிருக்கிறார் சோ. பின் கண்ணதாசன் கலைமாமணி விருதை வாங்காமல் புறகணித்துள்ளாராம்.