தெருவில் பழம் விற்ற தந்தை!! ரூ.10 ஆயிரம் கோடி சொத்துக்கு அதிபதியான சினிமா குடும்பம்...

Youtube Businessman Tamil Producers Net worth
By Edward Jun 05, 2025 06:31 AM GMT
Report

ரூ.10 ஆயிரம் கோடி சொத்து

சினிமா வாழ்க்கை பலரது வாழ்க்கையை அப்படியே வேறுவொரு வாழ்க்கையாக மாற்றிவிடும். சிலர் பொருளாதார ரீதியில் உச்சத்தை தொடுவார்கள், சிலர் வருமானம் இழந்து தவிப்பார்கள்.

தெருவில் பழம் விற்ற தந்தை!! ரூ.10 ஆயிரம் கோடி சொத்துக்கு அதிபதியான சினிமா குடும்பம்... | Cinema Family 10000 Crore Net Worth Who Are They

அந்தவகையில் ஒரு சினிமா குடும்பம் நாட்டின் பணக்கார குடும்பமாக மாறியுள்ளது. ஒருகாலத்தில் டெல்லியொல் பழ வியாபாரம் செய்த இக்குடும்பம் இன்று ரூ.10 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்களுக்கு பெயர் பெற்ற குடும்பம்.

குமார் குடும்பம்

அவர்கள் வேறுயாருமில்லை பிரபல இசை நிறுவனமான T-series-ன் உரிமையாளர்களான குமார் குடும்பம் தான். ஹுருன் இந்தியா பணக்காரர்கள் பட்டியல் 2024ன் படி அவர்கள் நாட்டின் பிரபல பணக்காரக்குடும்பமாக இருந்து வருகிறார்கள்.

தெருவில் பழம் விற்ற தந்தை!! ரூ.10 ஆயிரம் கோடி சொத்துக்கு அதிபதியான சினிமா குடும்பம்... | Cinema Family 10000 Crore Net Worth Who Are They

ஒரு தலைமுறைக்கு முன் குல்ஷன் குமார், டெல்லியின் தெருக்களில் பழங்களை விற்றுவந்தார். பின் 1970ல் அவரது குடும்பம் இசைக்கேசட் தொழிலை ஆரம்பித்து, ஒருக்கட்டத்தில் சிறு வணிகத்தில் இருந்து T-series, 1980ல் சூப்பர் கேசட்ஸ் இண்டஸ்ட்ரீஸ் என்ற பெயரில் நிறுவப்பட்டது.

குல்ஷன் குமாரின் தொலைநோக்குப் பார்வையுடன் கயாமத் சே கயாமத் தக், ஆஷிகி போன்ற படங்களுக்கான ஒலிப்பதிவுகள் தொடங்கி T-series-ஐ நாட்டின் மிகப்பெரிய இசை லேபிளாக மாற்றியது.

மகன் பூஷன் குமார்

1997ல் குல்ஷன் குமார் இறப்புக்குப்பின், அவரது மகன் பூஷன் குமார் T-series நிறுவனத்தின் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு புதிய உயரத்திற்கு கொண்டு சென்றார். இன்று T-series யூடியூப்பில் அதிக சந்தா பெற்ற சேனல்களில் ஒன்றாக இருந்து வருகிறது.

தெருவில் பழம் விற்ற தந்தை!! ரூ.10 ஆயிரம் கோடி சொத்துக்கு அதிபதியான சினிமா குடும்பம்... | Cinema Family 10000 Crore Net Worth Who Are They

ஹுருன் இந்தியா பணக்காரர்கள் பட்டியல் 2024ன் படி குமார் குடும்பத்தின் சொத்து மதிப்பு மொத்தம் ரூ.10,000 கோடி(1.2பில்லியன் அமெரிக்க டாலர்) என்ற மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போது T-series-ன் யூடியூப் சேனல் 200 மில்லியனுக்கும் மேலான சந்தாதாரர்களை பெற்று உலகளவில் டாப் இடத்தில் இருந்து வருகிறது.

தெருவில் பழம் விற்ற தந்தை!! ரூ.10 ஆயிரம் கோடி சொத்துக்கு அதிபதியான சினிமா குடும்பம்... | Cinema Family 10000 Crore Net Worth Who Are They

சகோதரிகள் - துளசி, குஷாலி

கிருஷ்ண குமார், தயாரிப்பாளராகவும் அவரது சகோதரி துளசி குமார் பிரபல பின்னணி பாடகியாகவும் அவரது மற்றொரு சகோதரி குஷாலி குமார் ஒரு நடிகையாகவும் திகழ்ந்து வருகிறார்கள். துளசியின் சொத்து ரூ. 250 கோடியாகவும் குஷாலியின் சொத்து ரூ. 100 கோடியாகவும் மதிப்பிடப்பட்டுள்ளதாம்.

இவர்களுக்கு அடுத்து யாஷ் ராஜ் பிலிம்ஸ் உரிமையாளரான சோப்ரா குடும்பம் ரூ. 8 ஆயிரம் கோடியுடன் இரண்டாம் இடத்திலும், ஷாருக்கான் 7800 கோடி ரூபாயுடன் மூன்றாம் இடத்திலும், சல்மான் கான் 3500 கோடி ரூபாய்களுடன் 4வது இடத்திலும், 4500 கோடி ரூபாயுடன் பச்சன் குடும்பம் 5வது இடத்தொலும், 2000 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் கபூர் குடும்பமும் இடம் பிடித்துள்ளனர்.

Gallery