மரத்தடியில் துணி மாற்றிய நடிகைகள்..ஆனால் திரிஷா நயன் தாரா... பிரபலம் சொன்ன உண்மை..
மூத்த பத்திரிக்கையாளர் வெங்கடேஷ், படத்தயாரிப்பாளர்களின் வலிகள், வேதனைகள் பற்றி சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில் பகிர்ந்துள்ளார். அதில், அப்போதைய காலக்கட்டத்தில் பெரிய பெரிய நடிகர்களை, பெரிய இயக்குநர்களை சர்வ சாதாரணமாக யார் வேண்டுமானாலும் பார்க்கலாம். ஆனால் இப்போது அது தலைகீழாக மாறிவிட்டது. அன்றும் இன்றும் ரஜினி சார் மட்டும் தான் மாறாமல் அப்படியே இருக்கிறார்.
துணி மாற்றிய நடிகைகள்
ஒரு சீன் முடிந்துவிட்டால் மரத்தடியில் எல்லாரும் ஒன்று சேர்ந்து உட்கார்ந்து பேசுவார்கள். நடிகைகள் மரத்தை சுற்றி 4 சேலைகளை சுற்றிப்பிடித்து அதற்குள் தான் ஆடைகளை மாற்றுவார்கள். இன்று திரிஷா, நயன்தாரா போல் அன்று ஸ்ரீதேவி, ஸ்ரீபிரியா இருந்தார்கள்.
அப்படிப்பட்டவர்கள் மரத்தடியில் ஆடைகளை மாற்றுவார்கள் இன்று ஒரு ஷாட் முடிந்ததுமே உடனே கேரவனுக்குள் சென்றுவிடுகிறார்கள். பல கோடிகளை முதலீடு செய்து படத்தை எடுக்கும் தயாரிப்பாளர்களே, ஹோரோவை பார்க்க வேண்டுமானால் கேரவன் வெளியே தான் காத்து நிற்க வேண்டியிருக்கிறது.
துக்க செய்தி நல்ல செய்திகளுக்கு கூட யாரும் பங்கேற்பதில்லை. சன்பிக்சர்ஸ், லைகா என 2, 3 நிறுவனங்கள் தான் இன்று இருக்கிறது. கலைப்புலி தாணு ஏராளமான படங்களை தயாரித்தவர். அவரே இன்று படம் எடுக்க யோசிக்கிறார்.
சிவகார்த்திகேயன் 100 கோடி
2 ஹிட் கொடுத்த பிரதீப் ரங்கநாதன் 50 கோடி சம்பளமாகவும், அமரன் ஹிட் தவிர வேறு எந்த ஹிட்டும் தராத சிவகார்த்திகேயன் 100 கோடி சம்பளமும், நயன் தாரா 20 கோடியும் திரிஷா 15 கோடியும் சம்பளமாக கேட்கிறார்கள்.
இப்படி கோடிகளை கொட்டி படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் லாபம் கிடைக்குமா? என்பதை யோசிப்பதில்லை, கோடிகளை கொட்டி படம் எடுத்து நஷ்டமடைந்து தற்கொலை செய்த தயாரிப்பாளர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள்.
இன்றைய சூழலில் பட்ஜெட் எகிறி, தயாரிப்பாளர்கள் காணாமல் போய்விட்டார்கள். அன்றைய காலம் போல் இன்றும் சினிமா இருக்க வேண்டுமானால் நடிகர்கள் ஒத்துழைப்பு தரவேண்டும், தயாரிப்பாளர்களி வாழ வைக்க வேண்டும் என்று அந்த பேட்டியில் அவர் கூறியிருக்கிறார்.