ஹேராம், சிட்டிசன் பட நடிகை வசுந்தரா தாஸின் ரீசெண்ட் போட்டோஸ்..
2000களில் கமல், அஜித் உள்ளிட்ட ஹீரோக்களில் படங்களில் நடித்து பிரபலமான நடிகை வசுந்தரா தாஸ், பாடகியாகவும் ஜொலித்து வந்தார். பல ஆண்டுகளாக காணாமல் போயிருந்த அவரின் ரீசெண்ட் புகைப்படம் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

வசுந்தரா தாஸ்
பெங்களூரை பூர்வீகமாக கொண்டு இந்துஸ்தானி பாரம்பரிய இசையை கற்று, சினிமாவில் பாடகியாகவும் நடிகையாகவும் 2000களில் ஜொலித்தவர் தான் நடிகை வசுந்தரா தாஸ். தமிழில் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான ஹேராம் படத்திலும் அஜித்தின் சிட்டிசன் படத்திலும் நடித்து பிரபலமானார் வசுந்தரா.
இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிப்படங்களில் நடித்து வந்தவர் முதல்வன் படத்தில் சகலகா பேபி, விஜய்யின் குஷி படத்தில் கட்டிப்பிடி கட்டிப்பிடிடா, ரிதம் படத்தில் பத்திக்கிச்சு என்ற பாடல்களை பாடியும் அசத்தினார்.

சினிமாவில் 6 ஆண்டுகள் பயணித்தவர் 2007க்குப்பின் நடிப்பில் இருந்து விலகி தன்னுடைய நீண்டகால நண்பர் ராபர்டோ நரேன் என்பவரை திருமணம் செய்து செட்டிலாகினார்.
டிரம்ஜாம் என்ற மியூசிக் பேண்ட் நடத்தி வரும் வசுந்தரா, சில கச்சேரிகளையும் நடித்து வருகிறார். அவரின் சமீபத்திய புகைப்படம் இதோ..

