மலையாள சினிமாவுக்கு நான் தேவையில்லை..2 வருஷமா வாய்ப்பில்ல!! நடிகை ஸ்வாசிகா..
மலையாள சினிமாவில் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த நடிகை ஸ்வாசிகா, தமிழ், தெலுங்கு மொழிகளில் அடுத்தடுத்த படங்களில் நடித்து பிரபலமானார். தற்போது மலையாள சினிமாவில் வாய்ப்பு கிடைப்பது குறித்து பேசியுள்ளது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஸ்வாசிகா
வைகை என்ற தமிழ் படத்தில் அறிமுகமாகி மலையாளத்தில் அடுத்தடுத்த படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ஸ்வாசிகா. 2019க்கு பின் மலையாளத்தில் டாப் நடிகையாக வளம் வந்த ஸ்வாசிகா. தமிழில் லப்பர் பந்து படத்தில் நடித்ததன் மூலம் மிகப்பெரிய ஆதரவை தமிழ் ரசிகர்களிடம் பெற்றார். ரெட்ரோ, மாமன், போகி, கருப்பு, நூறு சாமி, இருமுடி உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்தார்.
சமீபத்தில், பவன் சாதினேனி இயக்கத்தில் வெளியான ஆகாசம்லோ ஒக தாரா படத்தில் துல்கர் சல்மானின் சகோதரியாக நடித்துள்ளார். அப்படத்தின் பிரமோசனின் போது, மலையாள படங்களில் நடிக்காதது குறித்த பேட்டிக்கு பதிலளித்துள்ளார்.

மலையாள சினிமா
அதில், மலையாள சினிமாவிற்கு நான் தேவையில்லாமல் இருக்கலாம். இங்கிருக்கும் இயக்குநர்களுக்கு நான் தேவையில்லை என்றால் நான் என்ன செய்வேன், அப்புறம் மலையாள சினிமாவிற்கு நான் தேவையில்லாமல் இருக்கலாம். இல்லை என்றால் இதற்கெல்லாம் நான் என்ன பதில் சொல்ல முடியும்? எனகு வாய்ப்புகள் கிடைப்பதில்லை. கிடைக்கும்போது உறுதியாக வந்து நடிப்பேன்.
இல்லாமல் நான் நடிக்காமல் இருப்பதல்ல, இரு வருடங்களாக மலையாளத்தில் எந்த வாய்ப்பும் வரவில்லை. மலையாள சினிமாவில் நடிக்க வாய்ப்புகள் இல்லாததால் தான் மற்ற மொழிகளில் கவனம் செலுத்துகிறேன். அங்கு வாய்ப்புகள் கிடைத்தால் மலையாளத்திற்கு திரும்பத் தயாராக இருக்கிறேன் என்று வெளிப்படையாகா பேசியிருக்கிறார்.