வடிவேலுவை கோபமடைய செய்த தனுஷ் ! படிக்காதவன் ஷூட்டிங்கில் நடந்த சலசலப்பு

Dhanush Vadivelu
By Jeeva Aug 01, 2022 01:30 PM GMT
Report

படிக்காதவன் 

இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் படிக்காதவன்.

இப்படம் மக்களிடையே பெரிய வரவேற்பை பெற முக்கிய காரணம் அப்படத்தில் அமைந்த காமெடி காட்சிகள் தான். நடிகர் விவேக் அசால்ட் அறுமுகம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் மனதை கவர்ந்துவிட்டார்.

அப்படியான அந்த கதாபாத்திரத்தில் முதலில் நடித்ததே நடிகர் வடிவேலு தான். அவர் திடீரென இப்படத்திலிருந்து விலக அவருக்கு பதிலாக இப்படத்தில் நடித்தார் விவேக்.

ஷூட்டிங்கில் சலசலப்பு

இதற்கிடையே அப்பட ஷூட்டிங்கில் நடந்த ஒரு விஷயம் குறித்து பிரபல நடிகர் ஒருவர் பேட்டியளித்திருக்கிறார். அவர் கூறியதாவது “இயக்குநர் சுராஜ் ஷூட்டிங்கின் போது அண்ணனுக்கு நிமிடத்திற்கு காசு பொய்க் கொண்டு இருக்கிறது என்றவுடன் வடிவேலு இயக்குநர் சுராஜை பார்த்து முறைத்தார்.

13-வது டேக்கின் போது தனுஷ் வடிவேலுவிடம் இயக்குநர் சொல்வது போல் நடிங்க அண்ணே என்றதும், ஷூட்டிங்கில் அனைவரும் முன் தனுஷை கண்டு முறைத்தார் வடிவேலு” என அந்த நடிகர் பேசியிருக்கிறார்.    

விரைவில் உருவாகும் ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகம்