விஜய் கைது செய்யப்படுவாரா?.. முதல்வர் ஸ்டாலின் சொன்ன பரபரப்பு விஷயம்!
விஜய்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் தற்போது அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில், தொடர்ந்து ஊர் ஊராக சென்று பிரச்சாரம் செய்து வரும் விஜய்.
கரூரில் நேற்று பிரச்சாரம் செய்தார். அப்போது அதில் கலந்து கொண்ட தவெக தொண்டர்கள், விஜய் ரசிகர்கள், பொதுமக்கள், குழந்தைகள் மற்றும் பெண்கள் என மொத்தம் 39 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இந்த செய்தி மொத்த தமிழநாட்டையும் அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் ஆளாக்கியுள்ளது.
பரபரப்பு விஷயம்!
இந்நிலையில், இந்த சம்பவம் நடந்த சில மணி நேரங்களில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கரூருக்கு சென்று, பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தார்.
இறந்தவர்களுக்கு தனது இறுதி அஞ்சலியை செலுத்தினார். இதன்பின் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய ஸ்டாலினிடம், 'விஜய் கைது செய்யப்படுவாரா' என கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு ஸ்டாலின், "நடந்த துயரத்தை பார்த்து வீட்டில் இருக்க முடியவில்லை. சம்பவம் தொடர்பாக ஒரு நபர் ஆணையம் அமைக்க உத்தரவிட்டுள்ளேன்.
அரசியல் நோக்கத்தோடும் எதையும் கூற விரும்பவில்லை. ஒரு நபர் ஆணையம் மூலம் உண்மை வெளிவரும், ஆணையம் அளிக்கும் அறிக்கையின்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என கூறியுள்ளார்.